பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/359

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

323


குடிப் பூவின் மதிப்பு

இம்மலர்கள் குடிப்பூ என்ற வகையில் தனிச் சிறப்புற்றவை முடி மன்னர் தத்தம் குடிப்பூவை மிக மதித்தனர்; போதினர் சூடிப்பெருமை கொண்டனர். அத்துடன் அழகாகவும் கருதினர். யாவற்றிற்கும் மேலாக இப் பூக்களின்பால் அவர்கள் கொண்டிருந்த உரிமை குறிக்கத்தக்கது. அவ்வுரிமை தனி உரிமையாகாமல் அவ்வக் குடிக்குரிய பொது உரிமையாக இருந்தது. ஒரு குடியைச் சேர்ந்த மன்னர் பிரிந்தாலும் பகைத்தாலும் குடிப் பூவை விட்டாரல்லர்; மாற்றிக்கொண்டாரல்லர். சோழன் நலங்கிள்ளியும் சோழன் நெடுங்கிள்ளியும் பிரிந்தனர்; பகைத்தனர்; போருக்கும் எழுந்தனர். அந்நிலையிலும், “நின்ன கண்ணியும் ஆர் மிடைந்தன்று நின்னொடு பொருவோன் கண்ணியும் ஆர் மிடைந் தன்று' ஒற்றுமை காட்டிப் பாடப்பெற்றனர். இக்குடிப் பூக்கள் முடிமன்னர்க்கு மட்டும் உரியன அல்ல. அக்குடிவழி வந்த குறுநில மன்னர்க்கும் உரியனவாயின. முடிமன்னர் உறவினராய், அவர்காலத்தில் தனியாக ஆட்சி செலுத்தினும் அவர்க்கும் உரிய பூக்களாயின. 一á了ā* அதியமான் என்பவன் குறுநில மன்னன் உதியஞ்சேரல் என்னும் முடியுடைச் சேரனின் உறவு வழியினன். இவன் மகன் பொகுட்டெழினி. இவனைத் திருமலைக் கல்வெட்டு, சேர வமிசத்து அதிகமான் எழினி செய்த தன்மம்'2 -என் கின்றது. அதியனுக்கும் எழினிக்கும் உரிய குடிப்பூ சேரர்க்குரிய பனம் பூவாகவே அமைந்தது. அதியமான் சூடியிருந்ததை அவ்வையார், 'தொன்னிலை மரபின் முன்னோர் போல ஈகையங் கழற்கால் இரும்பனந் தொடையல்’8 - என்றார். இதற்கு உரை வகுத்த பழைய உரைகாரர், 1. புறம் : 45 : 3, 4 2 South Indian Inscription: Voj : 1 : No, 75. 8 புறம் ; 99 : 4 : 5.