பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/361

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

325


யும் நிகண்டுகள் கூறுகின்றன. பின்னிரண்டுகள் தாதகி என்னும் பெயர் பிற்காலச் சமய, வழிபாட்டு நூல்களில் இடம் பெற்றுள்ளது 'ஆர், ஆத்தி என்னும் இரண்டு பெயர்களில் சங்க காலத்தில் பெருவழக்காகவும் முழு வழக்காகவும் இருந்தது 'ஆர்' என்பதே. ஆத்தி என்னும் பெயரை முதன்முதல் கபிலர் கையாண்டுள்ளார். சங்க நூல்களில் அவர் எழுதிய குறிஞ்சிப் பாட்டு ஒன்றிலேதான், ஆத்தி என்னும் சொல் உள்ளது. இதன் தொடர்பில் மற்றொன்றை இங்கே நினைக்க வேண்டி வருகின்றது முடிமன்னர் குடிப் பூக்கள் மூன்றில் வேம்பும் போந்தையும் கபிலரது குறிஞ்சிப்பாட்டில் இடம் பெறவில்லை. இதுகொண்டு குறிஞ்சிப்பாட்டில் 'ஆத்தி என்றது குடிப் பூவாகிய ஆரைக் குறிக்காதோ என்னும் ஐயுறவு எழவேண்டியதில்லை. உரையா சிரியர்கள் பலரும் 'ஆர்' என்று மலரைக் குறிக்க வரும் இடங்களி லெல்லாம் ஆத்தி ன்றே பொருள் கொண்டுள்ளனர். எனவே கபிலர் 'ஆத்தி என்றது ஆரையே குறிப்பதாகும். காலப்போக்கில் 'ஆர் ஆட்சி அருகி, 'ஆத்தி ஆட்சி பெருகியது. உலக வழக்கில் 'ஆத்தி ஒன்றே நிறைந்தது. செய்யுள் வழக்கில் இரண்டும் உலவின. காட்டாத்தி, திருவாத்தி இடைக்காலத்தில் ஆத்தி, காட்டாத்தி, திருவாத்தி என இரு வகை அடைமொழி பெற்றது. காடாகச் செறிந்து பெருகிய காட்டு மரமானதால் காடு என்னும் அடைமொழியோடு காட்டாத்தி எனப் பட்டது. பழமையான பெயரகரமுதவிகள் 'ஆர் அலர் = காட்டாத்தி, எனப் பொருள் குறித்தன. திருவாத்தி ஆனதற்கு ஒரு கதை: சண்டேசர் என்றோரு சைவ அடியார். விசாரசருமர் அவரது பிள்ளைப் பெயர், ஆர்வத்தால் ஆவினங்களை மேய்க்கும் பணியை மேற்கொண்டார். சிவபெருமானை வழிபடும் உந்துதலால் மேய்ப்பிடத்தில் இருந்த ஒரு மரத்தின் கீழ் மணலைக் குவித்து இலிங்க வடிவமாக்கினார். பெரியபுராணம் இதனை, . . . . . . ... ஆத்தியின் கீழ் செங்கண் விடையார் திருமேனி மணலால் ஆக்கி’ வழி 1. பெரிய சண்டேசர் : 82 :2, .ே