பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/378

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

342


இருவகைப் பூக்களுமே மஞ்சள் பாவிய வெண்மை நிறங் கொண்டவை. ஆண், பெண் ஆகிய இருவகைப் பூக்களின் அளவையும், அமைப்பையும் நோக்கினால் இரண்டும் சூடிக் கொள்ளும் வாய்ப்பற்றவை. ஆண் பூ அளவில் மிகச் சிறியது. கதிரோடு சூடிக்கொள்ள இயலாதது. பெண் பூ எடுக்க இயலாதது; கோளவடிவினது. எனவே, இவற்றைச் சூடுவது என்பது ஒர் அறிகுறியே; சொல் அளவான மரபேயாகும். பின் எதனைச் சூடினர்? வலப்பக்கக் குருத்து "இரும்பனை வெண்டோடு மிலைந்தோன்’ (புறம் : 45 : 1) :"இரும்பனம் போந்தைத் தோடும்' (பொருந் : 143) ".......................... வளர்.இளம் போந்தை' - 'உச்சிக் கொண்ட ஊசி வேண்டோடு’ (புறம் : 100 : 3, 4) 'மிசையலங் குழைய பனைப்போழ் செரீஇ" (புறம் : 22 : 21.) என்பன சூடப்பட்ட பனம் பூ (?) வை விளக்குகின்றன. *தோடு' என்பது தடித்த பனை ஒலை. “வளரிளம் போந்தை' - குருத்து ஒலை. ஊசி வெண்டோடு’ - கூர்மையான முன் குருத்து ஒலை; வெண்மை நிறமுடையது. . பனைப் போழ்' - இரண்டாகப் பிளந்தது - 'பனைப்போழ் செரீஇ' - முடியில் செருகிச் சூடிக்கொண்டது. எனவே, கூர்மையான இளங் குருத்து ஒலையைப் பிளந்து குடிப்பூச் சின்னமாகச் செருகிக்கொண்டனர் என்று அறிகிறோம். அதிலும் வலப்பக்கத்து ஒலையைச் சூடினர். - 'கரிய பனங்குருத்தில் அலர்ந்த வலப்பக்கத்து ஒலை' -என்று நச்சினார்க்கினியர் உரை காட்டுகின்றது. 1 பொருந் : 48 உரை