பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/391

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. முருங்கை வரை முந்தும் பூக்கள்,

அறிமுக மலர்கள்.

புலவர் நாவிற் பூத்த பூக்கள்.

விண்ணில் ஒளிரும் மீன்களையும் எண்ணிச் சொல்லி விடலாம். ພ.fi: மலரும் மலர்களை எண்ணுக்குள் அடக்க முடியாது. - ' இறந்தாரை எண்ணிக்கொண் டற்று ' எனத் திருவள்ளுவர் இறந்தவர்களை எண்ணுவதையே இயலாததாகச் சொன்னார். அதனைக்கூட இக்காலத்தில் நிறைவேற்றிவிடலாம். ஒரு பொழுதில் பிறந்து, மறுபொழுதில் சிறந்து, அடுத்த பொழுதில் இறந்துபோகும் மலர்கள் எண்ணுக்குள் கட்டுப் படாதவை. மலரினது வாழ்வின் காலத்தை நோக்கினால் அதன் வாழ்வு துளிவாழ்வுதான். உலகில் துளி வாழ்வு மேற்கொள்ள ஒருநாளில் தோன்றும் மலர்கள் எத்துணை கோடியோ? எத்துணை ஆம்பலோ? எத்துணை தாமரையோ? இது கருதித் குதிள் : 22