பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/400

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

364


ஒவ்வொரு இதழும் நீண்ட நடுநரம்பின் இரு புறமும் அலை அலையாக ஒரம் நெளிந்து நெளிந்து அழகாகக் காட்சி யளிக்கும். வளமான இதழ், மூன்று அங்குல நீளமும் அரை அங்குல அகலமும் கொண்டது. பளபளக்கும் வண்ணங்களை வழங்குவது. எழில் மங்கையின் மெல்லிய கைவிரல் போன்றது. இதழ்கள் மேலும் தனித்தனியே விரிந்து கவிந்திருப்பது. விரல்கள் கவிந்த கையைத் தொங்கவிட்டிருப்பது போன்றிருக்கும். புற விதழ்கள் பசுமையாக மேல் மட்டமாக விரிந்திருக்க அகவிதழ்கள் ஆறும் தனித்தனியே வளைந்து தோன்றும். இத் தோற்றம் குடைவடிவங்கொண்டது. இந்நிலையில் இதனைக் 'குடைப் பூ எனலாம். இந் நிலையில் மேல் மட்டமாகப் புறவிதழ்கள் தெரியும் அதற்குக் கீழே வளைந்த நிலையில் அகவிதழ்கள். அவற்றிற்குக் கீழே ஆறு மகரங்கள் பக்கவாட்டில் தனித்தனியே நீண்டிருக்கும். ஒவ்வொன்றின் முனையிலும் ஒரு நெல் அளவில் தட்டையாகத் தாதை ஏந்திய தகடுகள் ஒட்டிக்கொண்டிருக்கும். அவற்றின் கீழே கீழ் நோக்கிய நிலையில் சூலகப் பொகுட்டு அமைந்திருக்கும். சூலகப் பொகுட்டின் மைய முனையிலிருந்து சூல்முடி ஒன்று நீண்டு தன் முனையில் மூன்று மயிரிழைப் பிரிவுடன் தோன்றும். இக்குடைப்பூ மேலும் தொடர்ந்து மேல்நோக்கி இதழ்களை விரிக்கும். இதனை விரிக்கும் என்பதை விடக் குவிக்கும் என்பதே பொருத்தமானது. இவ்வாறு மேல்நோக்கியவாறு குவிந்து நிற் பதே இதன் அலர் நிலையாகும். இந் நிலையை நோக்கினால் மற்றையப் பூக்களின் மலர்ச்சிக்கும் இதன் மலர்ச்சிக்கும் அமையும் வேறுபாட்டால் இதனைத் தலைகீழ் மலர்ச்சி' என்பது பொருந்தும். இவ்வமைப்புடைய காந்தள் தன் நிற வேறுபாட்டால் இரு வகைப்படுகின்றது. சூடாமணி நிகண்டு, காந்தள் செங்காந்தள் பற்றை இலாங்கலி தோன்றியும் பேர்' -என்றும் 'காந்துகம் கோடல் கோடை கருதுவெண் - காந்தளாகும்'. --என்றும் செந்


میے تی۔۔--س-----

1 தபா. தி மரம் : 24 : 1, 2,