பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/401

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

365


நிறங்கொண்டது தோன்றி; வெண்ணிறங்கொண்டது கோடல் என்றது. ஆனால், பிற நிகண்டுகள் இவ்விரண்டு பெயர்களை யும் மாறுபாடாகவும் குறித்துள்ளன. சான்றாகப் பிங்கல நிகண்டு, ‘'தோன்றி பற்றை இலாங்கலி செங்காந்தள்' -என்றும் 'கோடல் தோன்றி கோடை வெண்காந்தள்" 2 என்றும் தோன்றியைச் செங்காந்தள் வெண்காந்தள் என இரண்டின் பெயராகக் கூறியது. 'வெண்காந்தள் செங்காந்தள் என்றிரு விகற்பமும் கொண்டே வழங்கும் கோடைப் பெயரே' -எனச் சூடா மணி நிகண்டு கோடையைச் (கோடல்) செங்காந்தள், வெண் காந்தள் இரண்டிற்கும் பெயராகக் கூறியது. நிகண்டுகள் நிற்கத் தேர்ந்த உரையாசிரியராகிய நக்சினார்க்கினியரும் இக்குழப்பத்தை வழங்கியுள்ளார். குறிஞ்சிப் பாட்டின் உரையில் பூக்களை விளக்கும் இவர், 'ஒண்செங்காந்தள்' என்பதற்கு, "ஒள்ளிய சிவந்த கோடற் பூ” என்று எழுதிக் கோடலைச் சிவப்பென்றார். அடுத்துக் கோடல்’ என்று வரும் இடத்தில் "வெண்கோடற் பூ' என்று வெண்மையாக எழுதி யுள்ளார். கோடல் ஒன்றையே இவ்வாறு இரண்டுமாகக் கூறியுள்ளமை குழம்ப வைக்கின்றது. இக்குழப்பத்திற்குக் கரணியம் இப்பூ நிறம் மாறித் தோன்றுவதே. இக்குழப்பம் திரக் கோடல், தோன்றி என்னும் இரு சொத் களின் மொழி வரலாற்றைக் காணவேண்டும். இவ்விரண்டிலும் 'கோடல் என்னும் சொல் அமைவு ஒரு முடிவுகொள்ளப் பெரிதும் துணை நிற்பதால் முதலில் அதனைக் காணலாம். 1. பிங். நி : 2892 2 பிங், தி : 2898 8 தடா. தி : மரம் : 24 1, 2. 4 குறி. பா : டிரைக்குறிப்பு.