பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/405

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

369


'வரிவெண் கோடல் வாங்குகுலை வான்பூ”1 எனப்பட்டது. வெண்மையும் அதிற்கோடுகளும் அதன் வளை வும் சுட்டப்படுகின்றது. பிரிவுத் துன்பத்தால் தலைவியின் கைகள் மெலிய, அங்கு அணியப்பட்டிருந்த சங்கு வளையல்கள் கழன்று விழும், அக்காட்சிக்கு உவமையாக்கி, 'ஊழுறு கோடல்போல் எல்வளை உசூபவால்” -என்றார், “... ... ... ... இவட்கே அலங்கிதழ்க் கோடல் வீ உகுபவைபோல் இலங்குனர் எல்வளை இறை ஊரும்மே." -(முன்கை களினின்று விழும்)-என்று எடுத்துமொழிந்தார் நல்லந்துவனார். அவரே, 'கமழ் தண்தாது உதிர்ந்துக ஊழுற்ற கோடல் வி இதழ்சோரும் குலைபோல இறை.நீவு வளையாள்’’4 -என்றார். கோடல் மலர் முழுவதும் விழுந்தாலும், தனித்தனி இதழாக விழுந்தாலும் இச்சங்கு வளையலையே பொருத்தமாக்கிப் பாடினர். இங்கு ஓரிதழ் தானே உதிர்கிறது. இதற்கேற்ப உடைந்த சங்கு வளையலின் துண்டு கூறப்பட்டது. கந்தரத்தினார் என்பார், 'கோடு உடைந்தன்ன கோடல்'க -என்று இதழ் உதிராத நிலையிலும் உடைந்த சங்கு வளையலைப் பொருத்திப் பார்த்த புலவர் பலர். இதழ் வெண்மையாயினும் அதன் முனை செம்மை நிறமும் இடையிடம் கிச்சிலி நிறமுமாக இருக்கும். அக்காலத்துப் பொருள்களுக்கு வண்ணம் ஊட்டப் படுதல் ஒரு கலை. இவ்வாறு வண்ணத்தை ஊட்டுவது ஊட்டி’ எனப்பட்டது. வண்ணம் ஊட்டியது போன்ற தளிர் என்று பாடிய புலவர் பெயரை அறிய முடியாமல் அவருக்கே ஊட்டியார்’ அகம் : 264 : 3, கலி: 48 : 1, கவி : 15 17, கலி 121:18, 14, அகம் : 28 : 6, 鞏 24