பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/406

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

370


என்று பெயரிட்டு மகிழ்ந்தனர். அவ்வாறு வண்ணம் ஊட்டப் பட்ட சங்கு வளையலே இங்கு பொருத்திப் பாடப்பட்டது, கோடு என்றதும் புலவர்க்கு யானைக்கோடுதான் நினைவில் எழும் வெண்காந்தளாம் கோடலின் நிறைவு நிலை அதன் இதழ்கள் ஆறும் கீழிருந்து விரிந்து ஒவ்வோர் இதழும் வளைந்து கீழ்நோக்கிக் கவிந்திருப்பதாகும். ஆறும் வளைந்து கவிந்திருக்க அதன் கீழுள்ள ஆறு மகரங்களும் ஆறு குறுக்குக்கம்பிகளாக அமைய, கீழே தொங்கும் சூல்முடி கம்பாகத் தோன்றும் காட்சி ஒரு வெண் கொற்றக் குடை வடிவில் இருக்கும். அதனால், புறப் பொருள் இலக்கணம் விரித்த ஐயனாரிதனார் இதனைக் 'குடையலர்'- குடை உருவப் பூ என்றார். "குடையலர் காந்தள் கொல்லிச் சுனைவாய்' -என்பது அவரது வாய் மொழி. கோடல் பூவின் நிறைநிலை இவ்வாறு குடையாகித் தண் ணிழல் வழங்குவதாக அமையும். இக்கோடலின் வளர்ச்சி வரலாற்றை இங்கே காணப்பட்ட உவமைகள் வழியில் கூறினால், துடுப்பாய் எடுத்து, பாம்பாய் ஆடி, விரலாய் விளங்கி, சங்கு வளையலாய் முறிந்து, வெண்கொற்றக் குடையாய் நிறைந்தது. இதனைப் பாடல் அடிகளாக்கினால், "வண் துடுப்பாய்ப் பாம்பாய், விரலாய், வளைமுறியாய் வெண்குடையாம் தண் கோடல்2 -என்று அமையும், இவ்வடிகள் இவ்விடத்திற்காக எம்மால்கட்டப்பட்டனவல்ல. ஏறத் தாழ ஆயிரத்தெண்ணுறு ஆண்டுகளுக்கு முன்னரே கோடலின் வளர்ச்சியைத் தொகுத்துக் காட்டுவது போன்று எழுதப்பட்டன. வாகும். கணிமேதையார் அன்று கணித்துப் பாடிய இவை கோடல் வரலாற்றின் மாணிக்கச் சுருக்கமாகும். ஆசிரியர் நல்லந்துவனார் இதனையும் மூன்றாகச் சுருக்கி, 1 hp. Ga. tor : 240 : 1. 2 தினை. து 119 : 3, 4