பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/424

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

388


இறைச்சிக் காந்தளும் சிறுகைக் காந்தளும் ஒரு பருந்து செக்கச்சிவந்த காந்தளைப் பார்த்தது. தனக்குரிய இறைச்சி உணவாகக் கருதி எடுத்தது.' ஒரு சேதா (கறவைமாடு) பார்த்தது. தனக்கும் உணவர் கும் என்று தின்றது. தின்னும் போது மலரின் சிவந்த தாதுத் தூள் அதன் முகத்தில் படிந்தது. அதனால் அதன் நிறம் மாறுபட்டது மேய்ந்து நிறம் மாறி வந்த தாயைக் கண்ட கன்று தன் தாயில்லையோ என மயங்கியதாம். இது கபிலர், வண்ணனை. ஒரு புலவர், கொல்லையில் வாழை குலையின்றிருப்பதைக் கூர்ந்து நோக்கினார். தாரின் முனையில் வாழைப்பூ கொழுத்த மடலோடு உள்ளது. பக்கத்தில் காந்தள் பூத்துள்ளது. அப்பூ இதழ்களில் வாழைப்பூவின் முனை தோய்ந்துள்ளது. இக்காட்சி அவருள்ளத்தில் பதிந்துள்ளது. வீட்டிற்குள் வருகின்றார். அழும் குழந்தைக்குத் தாய் - புலவரது இல்லாள் - பால் கொடுக்க முந்துகின்றாள். குழந்தையை மடியில் கிடத்திக் குழந்தையின் வாயில் தனது பால் மார்பைக் காந்தள் மலர்போன்ற கையால் பிடித்து வைக்கின்றாள். இதனைக் கண்டதும் அப் புலவரது எழுத்தாணி சுவடியில் ஒடுகின்றது: r "புதன்வன் என்ற பூங்கண் மடந்தை முவையால் உறுக்கும் கைபோல், காந்தள் குலைவாய் தோயும் கொழுமடல் வாழை' 3 . -என்னும் அடிகள் மிளிர்கின்றன. அறிந்து மகிழ்கின்றோம். ஆனால், எழுதிய புலவரது பெயரைத்தான் அறிந்து மகிழ் முடியவில்லை. - . இவ்வாறெல்லாம் காந்தள் இலக்கியத்தில் நல்லாட்சி செலுத்துகின்றது. 1. மலை : 145-147 2 நற் : 259 : 1.8 8 தற்: 855: 1, 8