பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/452

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

432


களைக் கழித்தனர். கிளைகளும் வீழ்ந்தன, இந்நிலையில் கழிக்கப் பட்டு நிற்கும் வேங்கையைக் கருங்குழலாதனார் என்னும் புலவர் பார்வையிட்டார். நெஞ்சில் இது அவருக்கு அவலக் காட்சியாகக் பதிந்தது. சில நாள்கள் ஒடி மறைந்தன. இக்காட்சி நெஞ்சினின் றும் மறையவில்லை. சோழநாட்டை ஆண்ட பெருமன்னன் கரிகாற்பெருவளத் தான் திடீரென இயற்கையெய்தினான். நாடே கவன்றது. கவன்ற புலவரும் அரண்மனைக்கு ஓடினார், அவலக்காட்சிகள் நெஞ்சைப் பிழிந்தன. கரிகாலனது உரிமை மகளிர் மங்கல அணி முதலிய அணிகளையும் பட்டுடைகளையும் களைந்து அவலக் கோலத்தின் கிடந்தனர். பூ இழந்த தலையைப் பார்த்தார்; இழந்த வேங்கையின் உச்சி நினைவில் எழுந்தது. பொன்னணிகலன்கள் இழந்த கழுத் தைப் பார்த்தார்; பொன்னிறப் பூங்கொத்தை இழந்த வேங்கை யாகப் பட்டது. மணிமுத்து மாலை களைந்த தோற்றம், மணி யரும்பை உதிர்த்த மரமாகப்பட்டது. பட்டாடை வெறுத்த இடை பசிய தழைகளைக் கழித்த வேங்கையையே கண்ணில் நிறுத்திற்று. கேள்வனை இழந்து வீழ்ந்தரற்றும் அவலம், கிளைகள் வெட்டப் பட்ட வேங்கையாயிற்று. இவர்களும் வாழ்வில் கழிகல மடந்தையர் வேங்கையும் கழிகிளை, கழிதழை, கழியரும்பு, கழிமலர் ஆகிய கைம் பெண். கைம்பெண்களைக் கண்ட துக்கத்தில் புலவர், ‘பூவாள் கோவலர் பூவுடன் உதிரக் கொய்து கட்டழித்த வேங்கையின் மெல்லியல் மகளிரும் இழைகளைத் தனரே" - 5了瓦f ஒலமிடும் பாட்டை வடித்தார். . திருத்தக்கதேவர் பார்வையில் இராசமாபுரத்துப் பசும் பொன் மாளிகையொன்று பட்டது. அதன் மேல்மாடத்து உச்சி மேல் அழகிய மயில்கள் கூட்டமாக வானத்தைச் சுவைத்தவாறே உள்ளன. இத்தோற்றம், ... பொன்போற் பூத்துள்ள வேங்கைமேல் அழகிய மயிற் கட்டம் இடம்பெற்றுக் கருங்காரின் வரவைஎதிர்நோக்கிஇருந்தது? 1 чpiй , 324 і 15—17,