பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/476

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

456


'அவன் தந்த கோங்கம் பூவால் விளைந்ததெனப் பூத்தரு புணர்ச்சி கூறியவாறாயிற்று. இது கருப்பொருளாற் பாலை” -எனக் குறித்தார். பாலைத்தினைப் பாடல்களிலேயே மிகுதியாகக் கோங்கைக் நான்கின்றோம். கோங்குடன் சேர்த்துப் பாடப்படும் இலவமும் இதுபோன்றே மலையில் ಉನ್ಹfಹಗ್ಗಹ குறிக்கப்படினும் பாலைத் தினைப் பாடல்களிலே இடம் பெற்றுள்ளது. எனவே, கோங்க மலர் மூலத்தால் பாலைநில மலர். குறிஞ்சி மலையில் விளங்குவதால் குறிஞ்சி திரிந்த பாலை நில மலர் என வேண்டும். நிலத்தால் இவ்வாறு இருநிலைகாட்டி மயக்கும் கோங்க மலர் தான் மலரும் பருவத்தாலும் நம்மை மயக்குகின்றது. 'திணி நிலைக் கோங்கம் பயந்த அணிமிகு கொழுமுகை உடையும் பொழுது' வந்தது -என இளவேனிற். பருவம் சுட்டப்படுகின்றது. இப்பாடல் ஐங்குறுநூற்றில் இளவேனிற்பத்தில் அமைந்தது. இதுபோன்று அகத்திலும் இம்மலரைக் குறித்துக் கூறி, "இகழுநர் இகழா இளநாள் அமையம்' (இளவேனிற்காலம்) என இளவேனிலே குறிக்கப் பட்டுள்ளது. குறுந்தொகை 254 ஆம் பாடலும் கோங்கின் தலை யலர் இளவேனிலில் தோன்றியதாகக் குறிக்கின்றது. நற்றிணையில், - 'கோங்கம் குவிமுகை அவிழ . முற்றா வேனில் முன்னிவந் தோரே'3 -என முற்றா வேனிலாம் இளவேனிற்கு உரியதாகக் காண்கிறோம். இவை கொண்டு கோங்க மலர் இளவேனிற் பூ என்றாகின்றது. இத்துடன் ஆங்காங்கே முதுவேனிற் பூவாகவும் இதனைக் காண்கின்றோம். ஒரு தலைவன், 1 ஐங் : 843 : 2, 8. 8 நற் ; 85; 7, 9, 2 அகம் : 25, 12 .