பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/482

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

462


புதுமை வளர்ச்சி பஞ்சைப்பற்றவில்லை. நாட்டுப்புறமும், பழைமை மரபும் பஞ்சு மெத்தைகளைப் பற்றியுள்ளன. ஆனாலும் அப்பஞ்சும் சங்ககாலப் பஞ்சா என்றால் இல்லை என வேண்டியுள்ளது. நாம் பயன்கொள்ளும் மெத்தை, தலையணைப் பஞ்சு இலவ மரத்தின் பஞ்சுதான் ஆனால், சங்ககாலத்தில் கொள்ளப்பட்ட இலவு வேறு; இன்று கொள்ளும் இலவு வேறு. இரண்டும் அமைப்பாலும் காட்சியாலும் பலவற்றாலும் ஒன்றே போன்றவைதாம். இரண்டும் ஓங்கி வளரும்; சுற்று வட்ட மாகக் கிடைக்கையில் வளரும் கிளைகளை உடையவை. இலைகள் ஒத்தவை. காய்களும் ஒரே அமைப்பானவை. இரண்டிலும் பஞ்சு உண்டு. ஆயினும், சங்க கால இலக்கியங்களில் குறிக்கப்படும் இலவும், 'நீள் அரை இலவத்து அலங்கு சினை' (பெரும்பாண்:83) 'நீள் அரை இலவத்து ஊழ்கழி பன்மலர்' (அகம்:17:18) -எனவும் "ஓங்குநிலை இலவம்' (ஐங் : 338 : 2) -எனவும் நீண்ட அடிமரத்தைக் கொண்டதாகவும், ஓங்கி வளர்ந்த நிலையின தாகவும் பேசப்பட்டது. பிற்கால இலவம் இவ்விரண்டாலும் ஒரளவில் ஒத்தது. முன்னது அடிமரம் பருத்து நீண்டது. பின்னதை விட உயரமாக ஓங்கியது. முற்காலக் குறிப்புடைய இலவம் தனது அடிமாத்தில் முள் களைக் கொண்டது. “முள்ளரை இலவத்து ஒள்ளினர் வான் பூ'(ஐங் 320: ) 'முள்ளுடை இலவம் ஏறிய கலவ மஞ்ஞை" (ஜங் : மிகை 3 : 1.2) "முளிகொடி வலந்த முள்ளுடை இலவம்’ (நற் 105 : 1) இவ்வாறு அடிமரம் முள்ளைக் கொண்டது. மேல் கிளைகளில் முள்ளமைப்பு இல்லை. இம்முள்ளும் கம்பிபோன்று அமைந்த