பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/539

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

519


இராமாயணத்தை எழுதிய வடமொழிச் சான்றோர் வான் மீகியார் மராமரத்தின் பெயரை மரா மரா என்று தொடர்ந்து சொல்ல 'ராம ராம' என்றாகியதால் இறையன்பு கொண்டார். என்பர். இவ்வகையில் இம்மரம் ஒரு மந்திரத்திற்கும் பிடிப்பு தந்ததாகின்றது. - •. தமிழ் இலக்கியங்களில் இம்மரம் மரா மலரோடு ஒரிடம் பெற்றுவிளங்குகின்றது - இதுவரை கண்ட மலர்ச் செய்திகளைக் கொண்டு, வெண்கடப்ப மலர், கோட்டுப் பூ. மென்மையானது. வெண்மை நிறங் கொண்ட சிறிய மலர். கொத்தாகப் பூக்கும். அக்கொத்தும் வலப்புறமாகச் சுரிந்து பந்து போன்றிருக்கும். மனம் கமழும். குறிஞ்சி திரிந்த பாலை நிலப் பூ இளவேனிலில் பூக்கும். ஒப்பனை கருதிச் சூடப்படும்.' -என்று தொகுக்க முடிகின்றது. இவற்றுடன் மராஅ மலருக்கென அமைக்கப்பட்டுள்ள ஒரு தனிக் குறிப்பை எடுத்து மொழிய வேண்டும். இங்குக்காட்டப் பட்ட இலக்கிய வரிகளில் "மராஅ, மராஅம்', 'மராஅத்து" என அளபெடை பெற்றுள்ளதைக் காணலாம். பலா, குரா முதலிய சில சொற்கள் இவ்வாறு அளபெடை பெற்று வரும். எனினும் இம் மரா இலக்கியங்களில் குறிக்கப்படும் பாடல் சில இடங்கள் தவிர பல இடங்களில் மிகப் பல இடங்களில் அளபெடை பெற்றே அமைந்துள்ளது. மரா அத்திற்கு அளபெடைஒரு சின்னம் போன்று பெரும்பாலான இடங்களில் அமைந்துள்ளது. இஃது மராஅ மலர்க்கு ஒரு தனிச் சிறப்பாகி ஒரு நிறைவு பெறுகின்றது 9. (ஆ) கடம்பு - செங்கடப்பம் பூ குறிஞ்சிப் பாட்டின் மலர்ப் பட்டியலில் கடம்புப் பெயர் இல்லை. பட்டியலில் இல்லையெனினும் பின்னர், கடப்பம் பூங் கொத்து உவமையாகச் சொல்லப்பட்டுள்ளது. முன்னர்க் கண்ட பொதுப்பெயர் என்னும் வகையில் இச்செங்கடம்பையும் உள்ள