பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/548

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

528


அணியாகக் கண்டிருப்போம். இலக்கியம் இதனை நிலத்து மண்ணில் காட்டுகின்றது. மண்ணிற் கிடக்கும் நீல மணி எது? பவளம் எது? இடைக்காடனார் விடை வைத்துள்ளார்: 'முல்லை நிலத்தில் நல்ல மழை தொடங்கியுள்ளது.' காலைப் பொழுது. முன் நாள் பூத்த நீல நிறப் பூக்கள் வீழ்ந்து செம்மலாக வாடி கிடக்கின்றன. மழைத் தோற்றத்தால் மண்ணிலிருந்து வெளிப்படும் தம்பலப் பூச்சி என்னும் சிவந்த ஈ அல்லாத மூதாய்ப் பூச்சிகள் அவற்றின் பக்கத்தே ஊர்கின்றன. நீல மலருடன் சிவந்த மூதாய்ப் பூச்சி தோன்றும் காட்சி' ‘மணிமிடை பவளம் போல அணி மிக' இருந்ததாம். இவ் இடைக்காடனாரே இதே உவமையை மேலும் சுவைபட 'வைகறைப் போதில் மழைத் தோற்றத்தால் மூதாய்ப் பூச்சி நிலத்திலிருந்து மேல்வந்து குறு குறு என்று நீல மலர்களின் இடை இடையே புகுந்து ஒளிந்து ஒடியது” இக்காட்சி, 'மணிமண்டு பவளம் போல'2 - இருந்தது என்றார். அவரது உள்ளத்தை ஈர்த்ததால் இரண்டிடங்களில் பாடினார், போலும். இவருள்ளத்தை மட்டுமன்று; ஒக்கூர்மாசாத்தனார் சீத்தலைச் சாத்தனார் முதலியோரையும் கவர்ந்தமையால் அவர் களும் அகத்தில் (14, 134) பாடினர். இவ்வாறு மண்ணில் கிடந்த மணிமிடை பவளத்தில், பவளம் மூதாய்ப் பூச்சியாயிற்று. நீல நிற மலர் எது? - அது 'காயா மலர். காயாம்பூ என்றும் அதன் பேர் ே 'யாகக் காசாம்பூ என்றும் வழங்கப்படுவது. இக் காசாவை நிகண்டுகள் காசை என்றன. மேலும் அல்லி’ என்றும் புன்காலி' என்றும் மேற்போக்கான வகையில் குறித்தன. 1 'மணிமிடை பவளம் போல அணிமிக காயாஞ் செம்மல் தாஅய்ப் பலவுடன் ஈயல் மூதாய் ஈர்ம்புறம் வரிப்ப" . ~அகம் : 804 : 13-15, 2 அகம் :374 : 18