பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/559

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

539


யையும் செம்மையையும் இவற்றுடன் இதன் அடிப்பக்கத் திரட்சி யையும் உளத்தில் கொண்ட புலவர்கள் சிரல் என்னும் மீன்கொத் திப்பறவையின் மூடிய அலகை உவமையாக்கிப் பாடினர். 'சிரல்வாய் உற்ற தளவு' -சிறுமோலிகனார்; 'பனி வளர் தளவின் சிரல்வாய்ச் செம்முனை'2 σύιτ ή :* 'சிரல்வாய் வனப்பினவாகி ஒதலாநதையார்; ஈர்ந்தண் தளவம்' - மதுரைக் கண்ணன்கூத்தனார். திருத்தக்க தேவர் கூத்தாடுவோர் பற்களைப் பார்த்தார். அன்னார் வெற்றிலை - தம்பலம் அடிக்கடி போட்டதால் அவர் தம் பற்களில் செங்காவி ஏறியுள்ளன. அப்பற்கள் குருதி தோய்ந் தன போன்றுள்ளன. அதனால், அவற்றைக் 'குருதிக் கூர் எயிறு” என்றார். அக் கூர்ம் பற்கள் போன்றன. 'கொடித் தளவம்:4 என்றார். இச்செம்மலர் தண்ணென்று குளிரும். அதனால், இது "பனிப் பூந்தளவம்’ என்றும், பனிவளர் தளவம்’ என்றும் 'தண்டளவம்” என்றும் "ஈர்ந்தண் தளவம்' என்றும் குறிக்கப் படும். உண்மையில் தளவம் முல்லைபோன்று மணம் கமழ்வது. 'காடே கம்மென்றன்றே" என்றபடி கம்’ என மனப்பது. அதனால் முல்லையைப் போன்றே மகளிர் "புதல் தளவின் பூச் சூடினர்’’.6 சூடும் பூவாகிய தளவம், கொடியினத்தில் முல்லைக் குடும்பத்தைச் சேர்ந்த தாக, முல்லை நிலத்தில், கார்காலத்தில், மாலை நேரத் தில், செம்மை நிறத்தில் அரும்பி மலர்ந்து தண்ணென்று விளங்கும் பூவாகும். சிவந்த பல்லுடன் சிரிக்கும் இக்கொடிப்பெண் தழுவி இன்பங்காணும் ஆண்மரம் உண்டு. அதிலும் அம்மரத்தின் வளைந்த கழுத்தை உறவுப் பாங்கில் தழுவும். இப்பேறுபெற்ற ஆண்மரம் எது? கணிமேதையார், 1. தற் : 61 : 8 4 சீவ, சி : 16:51, 2 ஐங் 447 : 2. 5 அகம் : 23 : 5. 8 கார், நச. 86 : 1, 2. 6 புறம் :395 : 6,