பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/571

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

551


- பகன்றை, மணத்திற் குறிக்கத்தக்கது அன்று என்றாலும் இலக்கியத்தில் குறிக்கத்தக்க அளவில் இடம்பெற்றுள்ளது. நல்ல உவமைகளைப் படைக்க உதவியிருக்கின்றது. பகன்றை போன்று மணச் சிறப்பில்லாது, இலக்கிய இடங்கொண்ட பீர்க்கு" தொடர்ந்து காணத் தக்கதாகின்றது. 16. பசலை மலர். பீரம். பீர் என்பது இதன் பிள்ளைப் பெயர். 'பீர் என் கிளவி அம்மொடுஞ் சிவனும் -என்னும் தொல்காப்பியம் காட்டுவதுபோல் 'பீரம்' என்றாயிற்று. குறிஞ்சிப் பாட்டும் 'பீரம்' என்றே பாடியது. நிகண்டுகள் பிள்ளைப் பெயரை விட்டன. "பீரம் பீர்க்கு '-எனப் பீர்க்கு என்றன. குறிஞ்சிப் பாட்டில் நச்சர் "பீரம் = பீர்க்கு" என்றே உரை எழுதினார். பீர்ப்பூ, பீரம்பூ' என்பதைவிடப் பீக்கர்ம் பூ என்பதன் எளிமை வாய்ப் போக்கில் அமைந்து இச்சொல் உருவாகியது. இக்காலத்தும் 'பீர்க்கு என்பதே வழக்கிலுள்ளது. இதில் பெரும்பீர்க்கு படலிகை’ எனப்பட்டது. பேய்ப் பீர்க்கு என்றொன்று உண்டு. “கரையொடு பேய்ப்பிர்க்குஞ் சுமந்த’2 -என்பது புறப் பொருள் வெண்பா மாலை. "இவர்கொடிப் பிரம் இரும்புதல் மலரும்' என்னும்படி இப் பூ ஒரு கொடிப் பூ. இக்கொடி தழைத்த புதரில் படரும்,

  • மாரிப் பீரத்தலர்' என்றும், 'கார்தோன்றப் பீர் தோன்றி' என்றும் பல்லிடங்களில்

வரும். எனவே இது கார்ப் பருவப் பூ, ஐங்குறுநூறு, 1 தொல் : எழுத்து : 388 4 குறு : 98 : 5 2 பு. வெ. மா : 60 5 திணை. நூ : 100 8 ஐங் : 464 : 2