பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/572

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

552


"பிரம் இரும்புதல் மலரும் அற்சிரம்' - என முன்பனிக் காலத்தை ஒரிடத்தே குறிப்பது அக்காலத்து அருகிப் பூப்பதையே காட்டும். இஃது ஆயர்தம் குடிசைகளின் கூரைமேல் படர்வதும், குறிஞ்சிச்சாரற் காடுகளில் குறிக்கப்படுவதும், முல்லைத் தினைப் பாடல்களில் இடம் பெற்றிருப்பதும் இது முல்லைநிலப் பூ எனக் காட்டுகின்றன. 'சிறு பீர் வி ஏர் வண்ணம்' என்னும் நக்கீரர் தொடர் இப் பூ சிறியது; அழகிய வண்ணமுடையது என்பதைக் குறிக் கின்றது. சிறு பூவிலும் தனிப் பூ, அழகிய வண்ணமென்றால் எவ் வண்ணம்? 'பொன் போல் பிரம்’ (நெடு : 14) பொன்னென இவர்கொடிப் பீர்' (ஐங் : 464) "பொன்புனை பீரத்தலர்’ (ஐங் : 452)-எனப் பல இலக் கியங்கள் இதன் பொன்னிறத்தைப் பேசுகின்றன. ஆம், பொன் போன்ற மஞ்சள் நிறப் பூ, நிறம் பொன்; ஆனால், மணம் மண். குறிப்பிடத்தக்க எம்மணமும் இல்லாத பூ, மனத்தின் நாடி பார்க்கும் வல்லமை கொண்டது வண்டு. அதனிலும் தும்பி நாடி, வல்லுநர். ஒரு குமரிப்பெண் அதனொடு பேசுகின்றாள்: - 'தும்பியே, முள்வேலியில் படர்ந்த பீர்க்கம் பூவை ஊதித் தேனைப் பருகினாய். ஆனால் ஏன் முகம் சளித்தாய்? தேன் சுவைத்தாலும் அப்பூவில் மணம் இல்லாததால் முகம் வேறு பட்டாய்; அறிவேன். நீ ஒன்று செய்திருக்கலாம். எம். உடம் பில் படர்ந்துள்ள பசலையை ஊதியிருக்கலாம். மணத்தில் மகிழ்ந்திருப்பாய்”. இவள் பேச்சைக்கொண்ட பாட்டில் வேண்டிய பகுதி இது: " ... . . . ... - பீரம் ஊதி வேறு பட நாற்றம் இன்மையின் பசலை ஊதாய்"8 - இவ்வாறு மணம் இல்லாமையைத் தும்பியைச் சேரவைத்துப் பாடியவர் 1 ஐங் , 64 : 3 நம் : 21:1, 9, 2 அகம் : 51 : 12, 18,