பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/590

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

570


பாதிரி அம்பிகைக்கு அணியின் இல்லாள் எய்தும்' - எனப் புட்ப விதி நல்ல மனைவி கிடைக்கப் பாதிரிப் பூவை அன்னைக் கடவுட்குச் சாத்துமாறு அறிவிக்கின்றது. பாதிரியின் பெயரால் திருப்பாதிரிப்புலியூர் அமைந்துள்ளது. ஞானசம்பந்தர். 'பூக்கமழும் புனற்பாதிரிப் புலியூர்’ 2 -எனப்பாடியுள்ளார். இதற்குப் பாடலம் என்றொரு பெயர். இப் பெயரால் வட நாட்டில் பாட்னா என்னும் பாடலிபுத்திரம் பெயர்பெற்றது. சேக் கிழாரும், 'பாடலி புத்ரமென்னும் பதி' 3 -என்றார். இம்மரத்தின் கிளை முருங்கைபோன்று வலுவின்றி எளிதில் ஒடியும் புல்லியது. இதனால் இதற்குப் புள்காலி’ என்றொரு பெயர் உண்டு. இப்பெயர்களை நிகண்டுகள் குறித்துள்ளன. கோசிகை ஆடை போர்த்த பாதிரியாரைப் பற்றிப்படர்ந்து தழுவும் பூங்கொடி ஒன்று உண்டு. அஃது அதிரல். 21. நடுநாள் மலர். அதிரல். பாதிரியோடு அதிரல் கொண்ட உறவு மன உறவு. பாதிரி போன்று ஈர்ப்பு மணம் இல்லையென்றாலும் மனத்தால் அதனுடன் சேர்த்துப் பேசப்படும். ஒரு தோழி தலைவனிடம், 'தலைவனே, நீ பொருளிட்டச் செல்வதால் உனக்கு ஊதி வந்தான் அனால், ஆதனால் ஓர் இழப்பு நேர்வதை மறந்தாய். தலைவியைத் தழுவும்போது அவள் கூந்தல் கம்’ மென்று மணங்கமழுமே அதனை இழந்து போகின்றாய்" - -என்பவள், அம்மணத்திற்கு ஒர் உவமை கூறினாள்: 1 யுட். வி : 40 , 1 - 8 பெரி. பு : திருநாவு 38, 2 ஞான. தே திருப்பாதிரி : 8, х