பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/616

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

596


மேட்டில் இக்கொடி படர்வதால் கொடியும் நீர்ப்பிடிப்பு அற்ற தாகும். அதனால், 'வறள்கொடி’ எனப்பட்டது. இதற்கு 'நீரற்ற இடத்தில் எழுந்த அடும்பு' என்றார் நச்சர். கருமை மிகுதிவாய்ந்த செம்மை நிறத்துக் கொடியாகையால் "அடும்பின் செங்கேழ் மென்கொடி’ (அகம் 80 : 8, 9) கருங்கொடி அடும்பு" (கல் : 1) எனப்பட்டது. இக்கருமை கருதியே 'மாக்கொடி’ எனவும் பாடப்பட்டது. இருப்பினும் இலை நற்பசுமை நிறங் கொண்டதாகையால் பாசடும்பு" எனப்பட்டது. விளையாட்டு மகளிர் இக்கொடியைப் பறித்து விளையாடுவர். நோன்பிருக்கும்பெண்கள் மினல் மேட்டில் அமர்வதற்கு இக்கொடி களைப் பறித்தெறிந்து போட்டிருப்பர் என்பதை முக்கல் ஆசான் நல்வெள்ளையார் என்பார் காட்டியுள்ளார்.2 * > கோடைக் காலத்தில் காற்று துாற்றியமணலால் புதையுண்ட இக்கொடி கார்காலத்தில் தளிர்க்கும். கூதிர்காலத்தில் தழைக்கும். இக்கால இறுதியில் அரும்பு காணும். முன்பணிக்காலத்தில் பூக்கும். தொடர்ந்து பூக்குமாயினும் இதற்குரிய பருவம் முன்பணியே. ஒரை மகளிர் என்னும் விளையாட்டு மகளிர் இவ்வழகிய அரும்பைக் கொய்வதை ஒரு பொழுது போக்கு விளையாட்டாகக் கொண்டனராம். இதன் பூ தனிப் பூ. செந்நீல நிறத்தில் அழகாகப் பூக்கும் இப் பூவின் தோற்றம் குதிரையின் கழுத்தில் கட்டப்படும் சதங்கை மாலையின் மணி போன்ற வடிவமைப்புடையது. இதன் இலையை மானடியாகக் கூறிய நம்பி குட்டுவன் என்னும் சேர மன்னன், "அம்ேபின், தார்மணி அன்ன ஒண் பூ' 8 - எனத் தார் மணியை உவமையாக்கித் தார்மணி மலர்' என இதற்கு இலக்கியப் பெயர் சூட்ட வாய்ப்பாக்கினான். தார்மணி' என்னும் இவ்வுவமை இப்பூ முழு அலர்ச்சி பெறாத மலர்ப் பருவத்திற்குப் பொருந்துவது. நன்கு விரிந்த அலர் பாலிகை போன்றது. கூலங்களின்முளைகளை இட்டு வைக்கும் சிறுமண் குவளை பாலிகை’ எனப்படும், இப் பாலிகையை உவமையாக்கிக் கணிமேதையார், "... ... ... அடும்பெலாம் பாலிகை பூக்கும் பயின்று' என்றார். இவ்வுவமைப்பொருத் தத்தைக் கொண்டு நிகண்டுகள் பலவும் அடும்பு பாலிகை' 1 பட் : பா : 65, 8 குறு 248.