பக்கம்:அறிவியல் வினா விடை-வேதியியல்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

50


பண்புகள். ஆகவே, அய்டிரசன் அயனிகள் காடிப் பண்புகளுக்கும் அய்டிராக்சைல் அயனிகள் காரப்பண்புகளுக்குக் காரணம்.

101. போர் எப்பொழுது தம் அணுக்கொள்கையை வெளியிட்டார்? அது எதை விளக்குகிறது?

1911இல் அறிமுகப்படுத்தி 1913இல் வெளியிட்டார். இது அணு அய்டிரஜனின் நிறமாலையை விளக்குவது.

102. சார்லஸ் விதி யாது?

குறிப்பிட்ட நிறையின் வளியின் பருமன் 0° செஇல் ஒவ்வொரு செல்சியஸ் பாகைக்கும் அதன் வெப்பநிலை உயர்த்தப்படும்பொழுது, அதன் பருமன் மாறாப் பின்ன அளவில் பெருகுகிறது.

103. டால்டன் அணுக் கொள்கை யாது?

இதன் எடுகோள்களாவன: 1. அனைத்துத் தனிமங்களுக்கும் அணுக்கள் எனப்படும் மிகச்சிறிய துகள்களாலானவை. 2. ஒரே தனிமத்தின் எல்லா அணுக்களும் ஒத்தவை. 3. அணுக்களை ஆக்கவோ அழிக்கவோ முடியாது. 4. எளிய வீதங்களில் கூட்டு அணுக்களை உண்டாக்க அணுக்கள் சேருகின்றன.

104. கேலூசக் விதி யாது?

வளிகள் வினைப்படும்பொழுது, அவற்றின் பருமனும் வினையில் விளைந்த வளிப்பருமனும் ஒரே வெப்ப அழுத்த நிலைகளில் சிறிய முழு எண்வீதத்தில்

105. கிரகாம் விதி யாது?

வளியின் பரவுநேர் விரைவு அதன் அடர்த்தியின் வர்க்கமூலத்திற்குக் தலைகீழ் வீதத்திலுள்ளது.

106. நுரைத்தெழல் என்றால் என்ன?

வேதிவினையினால் ஒரு நீர்மத்திலிருந்து வளிக்குமிழிகள் விடுபடுதல். பொங்கிவழிதல் என்றுங் கூறலாம். எ-டு. சோடா நீர்.

107. பூத்தல் என்றால் என்ன?

படிகம் தன் நீரை இழந்து உப்பு உண்டாதல்.