பக்கம்:அறிவியல் வினா விடை-வேதியியல்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மருந்துகள், விரைந்து உலரும் கரைப்பான்கள் செய்யப் பயன்படுவது.

11. எத்திலீன் என்றால் என்ன?

நிறமற்ற வளி, நீரில் அரிதாகக் கரையும். புகைகொண்ட ஒளிச்சுடருடன் காற்றில் எரியும். செயற்கையாகக் காய்களைப் பழுக்க வைக்கப் பயன்படுவது.

12. எத்தைன் என்றால் என்ன?

வேறுபெயர் அசெட்டலின். அசெட்டலின் சுடரிலும் செயற்கை ரப்பர் தயாரிப்பதிலும் பயன்படுவது.

13. டச்சு நீர்மம் என்றால் என்ன?

எத்திலீன் இரு குளோரைடு. டச்சு வேதியியலார் கண்டுபிடித்தது.

14. ஈதர் என்றால் என்ன? பயன் யாது?

மணமுள்ளதும் நிறமற்றதுமான ஒளிபுகும் நீர்மம். மயக்கமருந்து, கரைப்பான்.

15. எத்தியான் என்றால் என்ன? பயன் யாது?

கரிமப் பாஸ்பேட், உப்பு. சைலீன், மண்ணெண்ணெய் முதலியவற்றோடு கலக்கும் பூச்சிக்கொல்லி.

16. எஸ்தராக்குதல் என்றால் என்ன?

ஆல்ககாலுடன் அமிலம் சேர்ந்து எஸ்தரும் நீரும் உண்டாகும் வினை. எ-டு. அசெட்டிகக்காடி எத்தில் ஆல்ககாலோடு வினையாற்றி, எத்தைல் அசெட்டேட் எஸ்தரைக் கொடுக்கும்.

17. எத்தனால் என்றால் என்ன? இதன் பயன்கள் யாவை?

வேறுபெயர் எத்தைல் ஆல்ககால். எஸ்தர், குளோரபாம் முதலியவை தயாரிக்க. பிசுமங்கள், வண்ணங்கள் முதலியவற்றிற்குக் கரைப்பான்.

18. சதுப்புநில வளி என்றால் என்ன?

மீத்தேன் உள்ள வளி. சிதையும் தாவரப் பொருளிலிருந்து உண்டாவது.

19. மீத்தேனின் பயன்கள் யாவை?

நிறமற்றதும் மணமற்றதுமான வளி. அய்டிரஜன், மீத்தைல் குளோரைடு முதலிய பொருள்கள்