பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/624

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

604

 குமட்டுர் கண்ணனார், "கவிர் ததை சிலம்பில் துஞ்சும் கவரி 1 - என இக்கவிர் மலைப் பகுதியில் உள்ளதைக் காட்டியுள்ளார். பிற குறிப்புகளும் இது குறிஞ்சி நிலத்ததாகவே கொள்ள வைக்கின்றன. இஃதும் வேனிற் பருவத்தில் பூப்பது. முள் முருக்கு போன்றே சூடப்படாதது. எனவே, குறிஞ்சிப்பாட்டில் இடம்பெறவில்லை. இக்கவிரில் வெண்மை நிறப் பூவகை உண்டு. இலக்கியங் களில் இதற்குக் குறிப்பும் இல்லையென்றாலும் இக்காலத்திலும் அனைத்து வகையிலும் செங்கவிரோடு ஒத்த வெள்ளைப் பூ உள்ளது. செங்கவிரின் காய் விதை செம்மை; வெண் கவிரின் காய் விதை வெள்ளை. இவ்வேறுபாடு ஒன்றன்றி மற்றனைத்தாலும் இரண்டும் ஒத்தவையே. வெண்மைப் பூ அருகித் தோன்றுவது. மருத்துக்குப் பயன்படுவது. இதன் சாற்றைக் கொண்டு ஈயத்தை நீறாக்கலாம்’ என்பர். ஆய் என்னும் குறுநில மன்னனது மலைநாட்டில் ஒரு பக்க 1.063,5ύ, 'கவிரம் பெயரியஉருகெழு கவாஅன்' எனக் கவிர் என்னும் பெயர் பெற்றது. வரலாற்றுப் பெயர்பெற்ற இதற்குப் புராணக் கருத்து ஒன்றை நச்சினார்க்கினியர் சீவக சிந்தாமணி உரையில் எழுதியுள்ளார். வேளிரால் கொண்டு வரப்பட்டதாகக் குறிக்கப் படுபவை சில உள. தேவர் உலகத்துக் கற்பகம் 'தேவரது சாவத் தால் தன்னிலையென்றிப் பூ அளவே உண்டாயிற்றென்க; மந் தாரமும் அவ்வாறாம்; கவிரும் அவ்வாறாம்" 3 என மரமில்லாமல் பூவே தோன்றுவதாகக் குறித்தார், இதன்படி இது தாயில்லாமல் பிறந்த பிள்ளை போலும். இருப்பினும் இலக்கியத்தாய் இதன் பிறப் பையும் வளர்ச்சியையும் தழைப்பையும் உண்மையாகவே காட்டு கின்றாள். . 1 பதிற் 11 :21, 3 έe : έ : 1710 &άν, 2 அகம் 198 : 1.5 -