பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/627

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

607


மெருகுள்ளது. இந்நிறம் தமிழரது உடலின் மரபுவழி நிறம். தோற்றகால மாந்தனது உடல் நிறமும் இஃதே. மாந்த உடலிய லார்க்கும் ஒப்ப முடிந்தது இது. - - "மாவின் தளிர் புரை மேனியர்' (திருமுருகு 144) "மாஅத்து அம் தளிர் அன்ன நன் மா மேனி" (குறு:331) -எனப் பல தமிழ் இலக்கியங்களிலும் காண்கின்றோம். இந் நிறத்தை, - •. - . "கழி கவின் இளமர்வின் தளிர் அன்னாய்' - எனக் கழி கவினாக-மிகுந்த அழகாகக் கொண்டனர் தமிழர். - இவ்வாறு நிறத் தொடர்பால் மட்டும் அன்று; இதன் பெயர் இம்மரத்தைத் தமிழரது உடைமையாகக் காட்டுகின்றது. 'மாங்காய், மாங்கனி' என்னுந் தமிழ்ச் சொற்களே மாங்கோ 1ANGC) நாங்கி (Mo WRE எனமேலை மொழிப்பெயர்களாயின. இகன்செடியியல் பெயர் மாங்கில்பெரி (MANGIFERA). இதனிலும் தமிழ் ஒலிப்பைப் காணலாம். வடமொழியினர் இதனை ஆமிரம்' என்பர், ஆமிரம், மாமரம் என்பதன் திரிபாகும். இம்மரத்தின் தொன்மை இடங்களாக வடமலை அடிவாரம், கடாரம், மலை நாடு எனக் கருதினும், இதன் சொல், தமிழ் மலை யிடத்தையும் மண்ணிடத்தையுமே அடையாளங் காட்டுகின்றது. தமிழ் இலக்கியங்களில் மாம் பூவைவிடத் தளிரே மிகுதியும் ஆட்சி கொண்டுள்ளது. 'மாவின தளிர்' என்றார் நல்லந்து வனார். பூக்களுக்குரிய பருவத்தைக் குறிப்பது போன்றமைந்த இளவேனிற் பத்தில், - "எரிகால் இளந்தளிர் ஈனும் பொழுதே'3 என இதன் தளிர் தோன்றும் பருவம் இளவேனில் எனக் குறிக்கப்பட்டுள்ளது. இம்மரம் "பூத்த மாஅத்து' என இதன் பூக்கொண்டும் சிறப்பிக்கப்பட்டுள்ளது. இப் பூ மிகச் சிறிய பூ. ஐந்து மிகச் சிறிய அகவிதழ்களைக் கொண்டது. சற்று செம்மை பாவிய மஞ்சள் நிறங்கொண்டது. கொத்துக் கொத்தாகப் பூக்கும். ஒவ் வொரு கொத்திலும்மேல் எல்லையாக 2000 பூக்கள் வரை இருக்கும் என்பர் செடியியலார். அத்துணைப்பூக்களும் வடுவாகுவன அல்ல. , ربي لا إليه 1 as 57, 18 . . . 8 49 3 so 28 :,17. : 182.4.11 . 4 ஜங் :10, 4