பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/631

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

611


இவ்வரும்புத் தொகுப்பு, கரும்பின் பசிய தாளால் மூடப் பட்டிருப்பதைச் சூல்கொண்ட பச்சைப் பாம்பாகக் கழார்க்கீரன் எயிற்றியனார் பாடினார். இத்தோற்றத்தைக் கூம்பு' என்னுஞ் சொல்லால், - -- 'கனைத்த கரும்பின் கூம்பு பொதி அவிழ'1 - என்றாா அவர். பொதி அவிழ்ந்த பூ வெண்மையாகக் கவரிபோன்று காட்சியளிக்கும். "நீடு கழைக் கரும்பின் கனைக்கால் வான்பூ - - கோடைப் பூளையின் வா ைடயொடு துயல் வர'2 - என்ற படி கோடைக்காலப் பஞ்சைப்போலக் காட்சிதரும். இப்பூங் கொத்து மழையில் நனைந்திருப்பதற்கு மழையில் சிறகுகள் பிசிராக வளைந்து நிற்கும் குருகை உவமை கூறினார் அவ்வெயிற் றியனார். ஆற்றின் கரைகளில் இப் பூ வரிசையாகப் பூத்துக் காற் றில் அசைந்தாடுவதைக் கண்ட உருத்திரங்கண்ணனார் காவிரிப் பூம்பட்டினத்துக் கடைவீதியின் இரு மருங்கிலும் உயர்த்தப்பட்டு அசைந்தாடும் வெண்மையான துணிக்கொடிகளுக்கு உவமை யாக்கினார்.3 இவ்வாறெல்லாம் இதன் வெண்மை நிறமும், பஞ்சுத்தன்மையும், கொத்தின் வடிவமைப்பும் வண்ணிக்கப் பட்டன. இதன் மென்மை கருதித் தூக்கணங்குருவியின் சேவல் தன் பேடையின் குஞ்சுப் பேற்றிற்காகக் கூட்டில் கொண்டுபோய் வைத்ததாம். இப் பூவை வஞ்சிமரக்கிளையில் உறங்கிய நாரை இரையாக அருந்தும் .5 r இவ்வாறெல்லாம் பயன்படினும் இதற்குக் குறிக்கப் பட்டுள்ள குணம், மணம் இல்லாமைதான். - 'தேம்பொதி கொண்ட தீங்கழைக் கரும்பின் நாறா வெண் பூ '8 -என நாறாத-மணக்காத-பூவாகும் தீங்கழைக் கரும்பாகத் தன் இனிய சுவைச்சாற்றால் உலகத் திற்கே இனிப்பை வழங்கும் பெருமை இதற்குண்டு. ஆயினும் அப்பெருமை இப்பூவின் மணம் இன்மையால் குறைவதை நாலடியார் 1 குறு 85 : 3, 4 குறு : 85 2-6, 2 அகம் : 217 : 4, 5, 5 புறம் : 384 : 2, 3, குறு 85 3, 4,