பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/635

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

615


கொடுத்துப் பார்ப்பர் என்பதாகும். இவ்வகையில் இப் பூ இந் நோட்டம் பார்க்கும் பூவாகப் பயன்பட்டது. - மணமற்றதாயினும் இலக்கிய மணம் வீசும் மலராகும். இலக் கியத்தில் தமிழ் இலக்கியத்திற்கு வெண்கவரி வீசும் மலராகும். இக்குடும்பத்தைச் சேர்ந்தனவாக இலக்கியத்தில் மயங்க வைக்கும் இரண்டு உள்ளன. அவை உந்துாழும் வேரலும் ஆகும். 35. தன்னுரிமை மண மலர். உந்துழி. மூங்கில், புல்லினத்தில் முதற்பிறப்பு; பெரும்பிறப்புமாகும். மூங்கிலில் 30 இனம் உண்டெனச் செடியியலார் கணக் கிட்டுள்ளனர். மூங்கிலைக் குறிக்கத் தமிழில் 25 சொற்கள் உள்ளன. அவற்றுள் பொதுப்பொருளில் 13 சொற்கள் சங்க இலக்கியங்களில் வந்துள்ளன. அப்பெயர்கள் கரணியப் பெயர் களாகப் படினும் இனவகை குறித்தும் அப்பெயர்களைத் தமிழ்ச் சான்றோர் அமைத்திருப்பர் எனக்கொள்ள இடமுண்டு. இச் சொற்களும் தமிழ்ச் சான்றோரது செடியியல் அறிவைக் காட்டுவன வாகின்றன, அவற்றுள்ளும் பூவைக் குறிக்கும் முகமாக இரண்டு வகை களை இலக்கியங்கள் காட்டுகின்றன. ஒன்று உந்துTழ்; மற் றொன்று வேரல். முன்னது பெருமூங்கில்; பின்னது சிறு மூங்கில். கபிலர் குறிஞ்சிப்பாட்டில் இரண்டையும் தனித்தனியே குறித் துள்ளார். "தொத்துந்துரழ்' என்னும் கபிலர் தொடர் தொத்து + உந்துாழ்' என்றே பிரித்தற்கு உரியது. இதன்படி 'உந்துாழ்' என்பதே சொல். ஆனால், சில இடங்களில் புனர் மொழியைப் பிரித்ததில் முந்துாழ்' என்று கொண்டனர். மலைபடுகடாத்தில், 'அலமருமுந்துரழ்" - என்றுள்ளது. இத்தொடரை 'அலமரும் + உந்துாழ்' என்றும் பிரிக்கலாம், 'அலமரும் + முந்துாழ்' என்றும் பிரிக்கலாம். 'முந்துாழ்' என்றும் பிரித்து அச் சொல்லையும் வழங்கினர். அகநானூற்றில், লী o,