பக்கம்:பதினாறும் பெறுக.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

14

14

தாழம்: நடிப்பதற்குத்தான் நாம் இருக்கிறோமே கருத்துக் கலையினை அள்ளிக் கொடுக்கும் கருவிகளல்லவோ நாம் ?

கமல: நல்லது கருவிகள் ஒழுங்காகச் செயல்படவேண்டும். ஒத்திகையைத் தொடங்குவோம். தலைவனும் தலைவியும் சந்தித்துப் பழகுகிறார்கள். ஒருவரையொருவர் விரும்பிக் காதலித்துத் திருமணம் புரிந்துகொள்ளுகிறார்கள். தமிழ்ப் பெருமகள் ஒருத்தி வந்து, இருவரையும் " பதினாறும் பெற்றுப் பெரு வாழ்வு வாழ்க ” என்று வாழ்த்துகிறாள். அவர்கள் களிப்பிலே திளைக்கிறார்கள். பெருமகள் கூறிய வாழ்த்து அவனுக்கு நினைவு வருகிறது. அவன் மனைவியிடம் சொல்லுகிறான்.எங்கே ? என்ன சொல்லுகிறான் ?

இளங்: (பாடி நடிக்கிறான்)

தாளம்: அடை.

ஆணெட்டும் பெண்னெட்டும் ஆகப் பதினாறு அருமைக் குழந்தைகள் பெறவேண்டும் ஆகட்டும் போகட்டும் என்று சொல்லிப் பின்னர் அடியேனை ஏமாற்றவிட மாட்டேன்.

தலைவி: ஐயயோ பதினாறு அம்மம்மா பதினாறு

ஆகாதென்னாலய்யோ நான் மாட்டேன்

ஆஸ்திக்கு ஆணொன்று ஆசைக்கு பெண்ணொன்று அதுபோதும் இதமாகப் பெறுவேனய்யா.

வேறு - தாளம் - ரூபகம்

தலைவன்: ஆஃகா கணவன் சொல்லினையே கடந்தால் கற்பு நிலைத் திடுமோ-அந்த உணர்வுடையவளாய் எனக்கு உடன்படலே தருமம்.

தலைவி: ஐயயோ ....மன்னிக்க வேண்டும் அத்தான் என்றனின் மனத் தடுமாறியதே. எந்த எண்ணிக்கையானாலும் பிள்ளையை ஈன்றிட நான் தவறேன். (பணிகிறாள்).

கமல: பலே இருவருக்குமே நடிப்பு நன்றாக வருகிறது. நன்றாகப் பாடி தைரியமாக நடிக்கவேண்டும். சபைக் கூச்சம் கூடாது.

இளங்: இந்தத் தலைவன் நிரம்ப மூர்க்கத்தனமான பேர்வழி போலிருக் கறதே.

கமல: அதனால்தான் பதினாறு - பிள்ளைகளைப் பெறவேண்டுமென மனைவியை வற்புறத்திப் பணியவைக்கிறான் !

இளங்: தாழம்பூவிடம் இப்படி வற்புறுத்த எனக்கு வருத்தமாக இருக்கிறது.

தாழம்: அதற்குப் பணிய எனக்கும் கசப்பாகத்தான் இருக்கிறது.

கமல: உங்களது சொந்த வருத்தத்தையும், கசப்பையும் ஒதுக்கிவைத்து விட்டு, நீங்கள் நாடகத்தின் பாத்திரங்களாக மாறவேண்டும். அப்பொழுதுதான் நாடகம் சோபிக்கும்.

இளங்: உங்கள் பாத்திரம் ?

கமல: வாழ்த்துக்கூற வந்த பெருமகள். கதையின் கருப்பொருளை விளக்குபவள் அவள்தான்.