பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/653

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

633


க்ார்காலப் பெருமழையில் தோய்ந்ததால் தன் நிறம் பசந்த தெறுழ்வி தன் புதல்மேல் உதிர்ந்து புதலின் நீல நிறத்தைப் பசந்த வெண்மையாக்கியது 1 - -என்று பாடியுள்ளமை கொண்டு இது புதலாக வளர்ந்து படருங்கொடி என்றும், மழை யால் நிறம் பசப்புறும் என்றும் அறியலாம். “... ... ... ... அரும்பவிழ்ந்து ஈர்ந்தண் புறவில் தெறுழ்வி மலர்ந்தன" 2 - என்னுங் கண்ணங்கூத்தனார் பாடலால் புறவாம் முல்லைநிலத்தில் பூப்பதை அறிகின்றோம். இங்கு, இப்பூவிற்கு உவமையாக, "கருங்கால் வரகின் பொரிப்போல்' என வரகரிசியைப் பொரித்தெடுத்த தோற்றம் கூறப்பட்டுள்ளது. முன்னே சொல்லப் பட்டகளிற்றின் முகவரிக்கு இஃதும் ஒத்ததாகும். இதுவடிவுவமை. இவ்வுவமையால் இதனை 'வரகுப் பொரி மலர் எனலாம். "நல்லினர்த் தெறுழ்வி' என்றபடி கொத்தாகப் பூக்கும். இதன் பெயர் குறிக்கப்படும் மூன்று இடங்களிலும் "வி" என்னும் சொல் சேர்த்துத் தெறுழ் வி” என்றே குறிக்கப்பட் டுள்ளமை இதற்கொரு தனிக்குறிப்பாகின்றது. 46. எரிபுரை மலர். எறுழம். கபிலர் குறிஞ்சிப்பாட்டில் 'எரிபுரை எறுழம்' 4 எனக் குறித்துள்ளார். ஐங்குறுநூற்றில் ஒருபாட்டில், " . . . விரியிணர்க் - கால் எறுழ் ஒள்வி தாய் முருகமர் மாமலை” 6 -என்றுள்ளது. இம்மலர் குறிஞ்சி நிலத்தில் பூக்கும் கோட்டுப் பூ (தாய்” என்றதால்) என்றும் கொத்தாகப் பூக்கும் என்றும் ஆகின்றது. கபிலரது 'எரி புரை” என்னும் அடைமொழியால் திப்போன்று 1 நற் 802 : 4, 5. 4 குறி. பா : 66 2. கார் : 25, 5 ஐங் : 808 2 தற் 802 : 4.