பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/656

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

636


வண்டுண்ணா மலர்களின் பட்டியலில் சண்பகத்திற்கே முதலிடம் உண்டு. வண்டு விடு துதில் கச்சியப்ப முனிவரும் வண்டைப் பார்த்து, கனிவர் சண்பகமும் கால் உழக்கா' என்றார். இக் கருத்தைப்பிற்கால இலக்கியங்களில் - அவற்றிலும் புராணங் களில் பரக்கக் காணலாம். ஆனால், வண்டறை இய சண்பகம்" (பரி : 1.1 : 48) "வண்டிமிர் சண்பகம்’ (திருவிளை தருமி 7 : 3) - என்பன போன்று பல்வகை இலக்கியங்களும் வண்டு மூசுவதைக் காட்டுகின்றன. எனவே, வேங்கையில் வண்டுபற்றி முன்னே குறித்தவற்றையே இதற்கும் கொள்ளவேண்டும். சண்பகத்தில் வண்டு மொய்க்காது என்பது மன அளவேயாகும். இப் பூ, பூசெய்க்குரிய எண்மா மலர்களில் ஒன்று. எனவே, தேவாரத்தில் பாடப்பட்டது. சிவனுக்குரிய மலர். பெரியாழ்வாரும் தம் இறைப்பிள்ளையைச் "சம்பகப் பூ சூட்ட வாராய்” என்று அழைத்தார். பிற்காலப் பாண்டியமன்னனாகிய வங்கிய சூடாமணி மாறன் என்பான் சிவனது பூசெய்க்காகச் சண்பக மரம் நிறைந்த பூஞ்சோலையை உருவாக்கி இப்பூ கொண்டு வழிபட்டுச் சண்பக மாறன்' எனப்பெயர்பெற்றான். பூசெயைப் பெற்ற சிவபெருமானும் "சண்பக சுந்தார்’ என்று பெயர் பெற்றார். தஞ்சை மாவட்டத்து மன்னார்குடிக்குச் சண்பகக் காடு என்னும்பொருளில் 'சண்பகாடவி' என்பதொரு புராணப்பெயர். அங்குள்ள திருமாலியக் கோவில் அன்னைக்கடவுள் பெயர் சண்பகத்தாயார்’ என்பது. அக்கோவில் திருமரம் சண்பகமரம். இப்பூ மருத்துவத்திலும் பங்கு கொண்டது. இப்பூ உடல் மறுவையும் பருவையும் நீக்கும் என வள்ளலார் இராமலிங்கரும் எழுதியுள்ளார். கவிமரபில் இப்பூ மகளிர் நிழல் பட்டால் மலரும் என்பர். ஆனால், கைம்ப்ெண்ணான மகளிர்க்கு இம்மலர் காய்ந்து வாடிய வாடலாம் சாம்பல் உவமையாயிற்று. சீவகன் கதையில் கட்டியங்காரன் இறந்ததும் அவனது உரிமை மகளிர் நோன்பு மேற்கொண்டதைக் கூறும் திருத்தக்க தேவர், - 1 வ. வி. து : கண்ணி 885