பக்கம்:நமக்கு நாமே உதவி.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நமக்கு நாமே உதவி

29


செய்கின்ற வேலையை செய்கின்ற இடத்திலேயே விட்டு விட்டு வரத் தெரிய வேண்டும்.

நாளைக்கு செய்து கொள்ளலாம் என்று வேலையை சேர்த்து வைத்துக் கொள்பவர்கள், சித்ரவதைப்படுவார்களே தவிர, சந்தோஷமாக மீண்டும் உழைப்பில் ஈடுபட முடியாது.

உழைப்பில் முன்னேற வேண்டும் என்று உறுதி எடுத்துக் கொள்பவர்கள், மேலும் நெஞ்சில் சில கருத்துக்களைப் புரிந்து கொள்ள வேண்டும்.

காரணமில்லாமல் கோபப்படுவது ஒன்று அது மனதையும் கெடுக்கும். சுமுகமான சூழ்நிலையையே பாதித்து விடும்.

அடுத்தது அநாவசியமான பேச்சு, தன்னை அறிவாளி என்று வெளிப்படுத்த முனைந்து, அசடராகக் காண்பித்துக் கொள்ளச் செய்துவிடும். அநாவசியமான பேச்சு தேவையற்றதாகும். தேவைப்படும்படியான தன்மையில், சுருக்கமாக, தெளிவாக இதமாகப் பதமாகப் பேச வேண்டும். அதுவே உழைக்கும் இனிய நிலையை உருவாக்கும்.

மற்றொன்று காரணமில்லாமல் கருத்தை மாற்றிக் கொள்வது, என்ன நடக்கும் என்று முடிவறியாமல், செயலை மாற்றி அமைப்பது; முன் பின் தெரியாதவர்கள் சொல்லில் நம்பிக்கை கொள்வது, எதிரிகளை நண்பர்களாக எண்ணிப் பழகுவது. இவை எல்லாம் ஒருவரை முட்டாளாக வெளிபடுத்திக் காட்டுவதுடன்,