பக்கம்:காவியம் செய்த மூவர்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23 அவள்பால் கண்ணகியை அடைக்கலமாக ஒப்புவிக்கக் கருதினள். மாதரியை அழைத்து, 'இவள் பெருஞ் செல்வக் குடியிற்பிறந்தவள். கற்புக்கடம் பூண்ட பொற்புடைத் தெய்வம். இவளே நினக்கு அடைக்கல மாகத் தருகின்றேன். இவளுக்குத் தாயும் தோழியும் ேேயயாகி இனிது பேணுவாயாக. பத்தினிப் பெண்டிர் இருந்த நாட்டில் வானம் பொய்யாது; வளஞ் சுருங் காது மன்னவர் கொற்றம் சிதையாது என்பர் ஆன் ருேர். மேலும் தவத்தினர் அடைக்கலம் சிறிதாயினும் மிகப் பெரிய இன்பத்தைப் பின்பு பயப்பதாகும்,' என்று கூறிக் கண்ணகியை மாதரிபால் ஒப்புவித்தாள். அவள் மகிழ்வுடன் ஏற்றுக் கவுந்தியிடம் விடை பெற்றுக் கண்ணகியைக் கோவலனுடன் தன் மனேக்கு அழைத்துச் சென்ருள். அவர்கள் இருவரையும் புது மனே யொன்றில் இருக்கச் செய்தாள். கண்ணகிக்குத் துணையாகத் தன் மகள் ஐயை என்பவளே அருகில் இருத்தினுள். அடிசில் அமைத்தற்கு வேண்டும் பொருள்களே எல்லாம் கொடுத்து உதவிள்ை. கண்ணகி அவற்றைக்கொண்டு காதலற்கு உணவாக்கி அன்புடன் ஊட்டினள். இருவரும் அமுதுண்ட பின்னர்ச் சிறிது இன்பமுடன் உரையாடி மகிழ்ந்தனர். கோவலன் தனது பொருந்தாச் செயலே கினைந்து இரங்கினன். கற்புத்திறம் கடவாத கண்ணகியின் பொற்பினைப் போற்றினன். அவளுடைய சிலம்புகளுள் ஒன்றைப் பெற்று விற்றற் பொருட்டு மதுரை மாநகர்க் கடைத்தெருவிற் புகுக் தான். ஆயர் சேரியினின்று புறப்படுங்கால் எதிரே கொல்லேறு பாய வந்ததனைத் தீநிமித்தமெனச் சிந்தை யில் கொள்ளாதவனுய்ச் சென்ருன்.