பக்கம்:காவியம் செய்த மூவர்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11 மன்னனேயும் மைந்தரையும் அடிமுதல் முடிவரை ஆய்ந்து கூர்ந்து நோக்கினன். பின்னர், அந் நிமித்திகன் மன்னனை நோக்கி, 'அரசரேறே ! நின் மைந்தர் இருவருள் இளங்கோவே அரசற்குரிய இலக்கணங்கள் எல்லாம் இனிது அமையப் பெற்றுள்ளான். அவனே நினக்குப் பின்னர் நீள்முடி தரித்தற்குத் தகுதியுடையவன்,' என்று இயம்பி கின்ருன். நிமித்திகன் மொழியைக்கேட்ட செங்குட்டு வன் விழிகளில் சினத்தி பொங்கியது. அவனது உள் ளத்தில் கோபக்கனல் கொந்தளித்தது. இதனேக் குறிப் பால் உணர்ந்த இளங்கோ ஆசனம்விட்டு எழுந்தார். நிமித்திகனைப் பலவாறு கடிந்து பேசினர். இவன் அரசு முறை அறியாது பிதற்றினன் என்று பழித் துரைத்தார். அவனே அரசவையைவிட்டு அகலுமாறு செய்தார். 'யான் இப்போதே அரச வாழ்வை நீத்துத் துறவுக்கோலம் கொள்வேன், என்று உறுதி கூறினர். இளங்கோவின் உறுதிமொழியைக் கேட்ட தங்தை யாகிய இமயவரம்பன் சிந்தை கலங்கினன். இளங் கோவை மார்போடு அணைத்து, மகனே! என்ன காரியம் செய்யத் துணிந்தாய் சிறிதும் ஆராயாது துறவுகொள்ளத் துணிந்துவிட்டாயே! அரசுக் கோலத் துடன் அண்ணனுக்குத் துணே யாக இருத்தல் ஆகாதா ?' என்று பலவாறு வருந்தி மொழிந்தான். அரசவையில் அமர்ந்திருந்த அமைச்சர் முதலாயினர் வியப்பும் திகைப்பும் அடைந்தனர். அண்ணனாகிய செங்குட்டுவனே இளவலின் சிறந்த உள்ளத்தைக் கண்டு வியந்தான். துறவுபூணத் துணிந்த அவனது உறுதியைக் கண்டு இரங்கினன். தன் இளவலே நோக்கித், தம்பி! நினது உறுதிப்படியே தவக்கோலம்