பக்கம்:காவியம் செய்த மூவர்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 ஒருங்கு திரட்டினர். இடையிடையே தமிழாசிரிய ராகிய சீத்தலேச் சாத்தனரின் சிறந்த துணையையும் பயன்படுத்திக்கொண்டார். நூலைப் பாடத் தொடங்கி ர்ை. நூலுக்குப் பெயர்சூட்ட நுண்ணிதாக எண்ணி ஆராய்ந்தார். காவியத் தலைவர்களில் ஒருவர் பெயரை நூலின் பெயராக அமைப்பதில் சிறப்பில்லே யென்று கருதினர். கண்ணகியின் காற்சிலம்பன்ருே கதையின் புதை பொருளாகக் காட்சியளிக்கிறது என்பதை நுட்பமாகக் கண்டார். சிலம்பால் விளைந்த கதை யாதவின் சிலப்பதிகாரம் என்ற பெயர் சூட்டுவேன் என்று குறிப்பிட்டார். சில திங்களில் சிலப்பதிகாரக் காவியத்தை உருவாக்கி விட்டார். சீத்தலைச் சாத்தனர் தலைமையில் செந்தமிழ்ப் புலவர் பேரவை வஞ்சிமாநகரில் கூடியது. இளங்கோ வடிகள் தாம் அமைத்த காவியத்தை அப் பேரவையில் பண்ணமையப் பாடிக் காட்டி அரங்கேற்றினர். செஞ் சொற் காவியமாகிய சிலப்பதிகாரம் எல்லோருடைய நெஞ்சையும் அள்ளுவதாயிற்று. சேரர் கோமானுகிய செங்குட்டுவன் தம்பியாரைச் சிந்தை மகிழ்ந்து பாராட்டினன். சிலப்பதிகார அரங்கேற்ற விழா விற்குத் தலேமை பூண்ட சாத்தனர், சேர வேந்தனையும் இளங்கோவடிகளையும் உளங்குளிர வாழ்த்தினர். சேரர் பெருமான் கண்ணகிக்குக் கற்கோவில் அமைத் தருளினுன் : இளங்கோவோ அன்னவட்கு என்றும் அழியாத காவியக் கோவில் அமைத்தருளினர்; இரு பெருங்கோவில்களும் என்றும் நின்று நிலவுவனவாக!' என்று வாயார வாழ்த்தினர் சீத்தலைச் சாத்தனர்.