பக்கம்:காவியம் செய்த மூவர்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ச. சேக்கிழார் புலமைச் சிறப்பு பெரியபுராண ஆசிரியராகிய சேக்கிழார் பெருமா னேத் தெய்வப் புலமைச் சேக்கிழார் என்றே அறிஞர் பாராட்டுவர். இளமையிலேயே இலக்கிய, இலக்கண, சமயநூல்களே ஐயந்திரிபற ஒதியுணர்ந்த உயர்ந்த புல மையைச் சேக்கிழார் பெற்றிருந்தமையைத் தெரிந்தே அநபாய சோழன் தனது பேரரசுக்கு அவரைத் தலைமை அமைச்சராகத் தேர்ந்தெடுத்தான். மதிநுட்பம் நூலோ டுடைய சேக்கிழார் அமைச்சுரிமைத் தொழிலில் காட் டிய ஆற்றலைக் கண்டு அபாயன் பெருவியப்புக் கொண்டான். அதனாலேயே அவருக்கு உத்தமசோழப் பல்லவன்' என்ற உயரிய பட்டத்தைக் கொடுத்துப் பாராட்டின்ை. - சேக்கிழார் காலத்திற்கு இருநூறு ஆண்டுகட்குப் பிற்பட்ட காலத்தில் வாழ்ந்த பெருஞானியாகிய உமா பதிசிவனுர் சேக்கிழார் புராணம் பாடினர். அவர் தில் லேக் கூத்தன் திருவருளேப் பெரிதும் பெற்றவர். அப் பெருமான் திருவருளால் பல அற்புதங்களே நிகழ்த்திய வர். தில்லேக் கூத்தன் திருமுகம் அனுப்பியவாறே பெற்ருன் சாம்பான்' என்ற அடியவனுக்கு முத்தி கொடுத்தருளியவர். அவ் உண்மையை நிலைநாட்ட மன் னனும் மக்களும் காணுமாறு முள்ளிச் செடிக்கும் முத்தி கல்கியவர். இத்தகைய வித்தகப் பேரருளாள ராகிய உமாபதி சிவனர் தாம் பாடிய புராணத்தில் சேக்கிழாரது புலமையைப் பலவாறு வியந்து பாராட்டு கின்ருர். - 'வடமொழியில் இராமாயணம் வகுத்த வான்மீகி, பாரதம் பாடிய வேதவியாசன், ஆயிரம் காப் படைத்த ஆதிசேடன், பொதியத் தமர்ந்த முனிபுங்கவன் ஆகிய

  1. يابسة تقع ء irعه