பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/664

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

644

இது பவள மல்லிகை" எனவும் பவளக்கால் மல்லிகை' எனவும் வழங்கப்படுகின்றது. இதழ்கள் நல்ல வெண்மை நிறத்தவை கிடைமட்டத்தில் விரிந்து மலராகும். காம்புடன் கழன்று விழும். மகளிர் சூடிக்கொள்வர். காம்பு உள்துளைகொண்டதால் நாரால் கோப்பதற்கு வாய்ப்பானது. வழிபாட்டிற்கும் உரிய பூ, காம்பின் பவள நிறத்தால் இது பவளக்கால் மலர்' 52. பக்க மலர். பாங்கர். 'பாங்கரும் முல்லையும் தாஅய பாட்டங்கால்' -என்னும் முல்லைக் கலிப்பாடல் பாங்கரை முல்லையொடு காட்டுகின்றது. பாட்டங்கால் என்றால் தோட்டக் கொல்லை’ என்று பொருள். எனவே பாங்கர்ப் பூ, முல்லை நிலத்துப் பூ. -- இதற்கு உரை எழுதிய நச்சினார்க்கினியர், 'பாங்கர்க் கொடியும் முல்லைக்கொடியும் பரந்த முற்றுரட்டாகிய தோட்டம்' என்று எழுதினார். ஆம், பாங்கர் ஒரு கொடி. முல்லைக்கொடி போன்றது. முல்லைபோன்று வெண்மை திறப் பூ. முல்லையாடு மலர்தல் கூறப்படுதலால் கார்காலமலர். முல்லையைப் போன்று குடப்படும் பூவுமாகும். ஏறுதழுவும் முல்லை நிலக்காளையர், 'குல்லையும் குருந்தும் கோடலும் பாங்கரும் கல்லவும் கடத்தவும் கமழ்கண்ணி மலைந்தனர்" 2 - என்று காண்கின்றோம். இங்கும் நச்சர் 'பாங்கர்ப் பூ என்றெழுதியுள்ளார். நச்சினார்க்கினியர் உரையால்பொருள் தெளிவு உண்டாவது போன்று குழப்பமும் நேர்வதைக் கண்டுள்ளோம்.பாங்கரிலும் ஒரு குழப்பம் உண்டு. குறிஞ்சிப்பாட்டில் குறிக்கப்படும் பாங்கர்க்கு மட்டும் 'ஒமை" என்று பொருள் எழுதியுள்ளார். 'ஒமை’ என்பது பாலை நில மரம். TiT: 3, 4, 8 குறி. பா : 85, 2. கலி ; 108 : 8, 4, -