பக்கம்:இறைவர் திருமகன்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

45

திருக்கும்” என்று இயேசுநாதர் தம்மைச் சூழ்ந்திருக்கும் கூட்டத்தினரிடம் கூறுவார்.

இறைவன் மக்களிடம் எத்தகைய அன்புடையவர் என்று எடுத்துக் காட்டுவதற்காக இயேசுநாதர் ஒரு கதை சொன்னார்.

அக்கதை இதுதான்.

ஒரு மனிதனுக்கு இரண்டு மைந்தர்கள் இருந்தார்கள். அவர்களில் மூத்தவன் நல்லவன்; அடக்கமுடையவன்; தந்தையிடம் அன்பு மிக்கவன். இளையவனோ செலவாளி.

இளையவனுக்கு உலகத்தைச் சுற்றிப் பார்க்க வேண்டும் என்ற ஆசையுண்டாயிற்று, ஆகவே அவன் தன் பங்கைப் பிரித்துத் தரும்படி தந்தையிடம் வம்பு செய்தான். என்றேனும் ஒரு நாள் பிரித்துக் கொடுக்க வேண்டியது தானே என்று தன் மனத்தை சமாதானப்படுத்திக் கொண்டு, தந்தை பங்கு பிரித்துக் கொடுத்தான்.

கையில் நிறையப் பணத்துடன் வேறு நாட்டுக்குக் கிளம்பினான் இளையவன், மிகத்