பக்கம்:தமிழ்நாடும் மொழியும்.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

148

தமிழ்நாடும் மொழியும்


கப்பட்ட, தபால், காவற்படைத் (Police) துறைகள் திப்புவினால் ஒழுங்குபடுத்தப்பட்டு நல்லமுறையில் பணியாற்றத் தலைப்பட்டன. மேலும் திப்புவின் காலத்தில் நாணயங்கள் வெளியிடப்பட்டன.

ஐரோப்பியர் வருகை

முன்னுரை

கி. பி. 17-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே மேலை நாட்டு வாணிப மக்களாகிய போர்த்துக்கீசியர், டச்சுக்காரர், பிரெஞ்சுக்காரர், ஆங்கிலேயர் என்போர் தத்தம் செல்வாக்கை நம் நாட்டில் பரப்ப முயன்றனர். இந்தியக் கடலாதிக்கத்தை முதலில் கைக்கொண்டவர்கள் போர்த்துக்கீசியராவர். இந்தியாவிற்கு வந்த முதல் ஐரோப்பியன் வாச்கோடகாமா ஆவான். இப் போர்த்துக்கீசிய மாலுமி கி. பி. 1498-இல் கள்ளிக்கோட்டைக்கு வந்து சென்றான். இவனது வருகை நம் நாட்டு வரலாற்றையே மாற்றியமைத்துவிட்டது என்று கூறவேண்டும். போர்த்துக்கீசியரது நாகரிகமும், பழக்க வழக்கங்களும் நம் நாட்டில் பரவின. வாணிபம் வளம் பெற்றது. விசய நகர வேந்தர்களுக்குப் பாரசீகத்திலிருந்து புரவிகளை இவர்கள் வரவழைத்துக் கொடுத்துப் பொன்னும் மணியும் பெற்றனர். கோவாவிலும், வேறு சில இடங்களிலும் கத்தோலிக்க சமயம் வேரூன்றியது. முதல்முதல் அச்சகம் நம் நாட்டில் நிறுவப்பெற்றது. சென்னையின் ஒரு பகுதியாகிய சென்தோம் போர்த்துக்கீசியருக்குச் சொந்தமாயிற்று.

போர்த்துக்கீசியருக்குப் பின் டச்சுக்காரர் நம் தாயகத்திற்கு வந்தனர். பழவேர்க்காடு, (கி. பி. 1160) தரங்கம்பாடி (1620), தூத்துக்குடி (1658) நாகை முதலிய இடங்களில் வாணிக நிலையங்கள் நிறுவப்புட்டன.