பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/683

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

663

 விளங்கும் வெண்மலர்' என்று விளங்கும் வெண்மையாகப் பாடினார். இது கொத்தாகப் பூப்பதை “இணர் குறிக்கின்றது. "சுரம்' என்பதால் இது பாலை நில மலராகின்றது. - 'செல்வோர் சென்னிக்கு ஊட்டும்' என்பதால் பாலை நிலத்திற் செல்வோர் இம்மலரைச் சூடிக்கொள்வதை அறிகின் றோம். ஒப்பனைக்காக அன்றி ஒரு பயன் கருதிச் சூடினர். அரஞ்சுரமாகிய பாலைநிலத்தில் கடிய வெப்பத்தை இம்மலரின் தண்மை குளிர்ச்சி ஊட்டித் தணிக்கும் தன்மையது. இதனை 'ஊட்டும்” என்னும் சொல் குறிப்பாகச் சொல்லி நிற்கின்றது. கோடைக்கால வெம்மைக்குப் பயன்பட்டதால் இது வேனிலில் மலரும் மலர். திருத்தக்கதேவர் ஒப்பனை கருதியும் மகளிர் மாலை யாக்கி அணிவதைப் பாடினார். இருப்பினும் குறிஞ்சிப் பாட்டில் இடம் பெறாதது. மேலே கண்ட பாடல்; ஐங்குறுநூற்றில் உள்ளது; பாலைத் திணையின் முதற்பாடல். அப்பாடலின் முன்னிரண்டு அடிகள். பாடியவரும் பாலை பாடுவதால் பெயர் பெற்ற பெருங்கடுங்கோ. இம்மலர் மணமுள்ளது. மலர் காய்ந்து சருகானாலும் மணக்கும். இச்சருகைப் பொருக்கு' என்பர். இப்பொருக்கை அரைத்துச் சாந்தாக்கிக் காந்தருவதத்தைக்குப் பூசினாராம். குவளை இதழின் தடிப்பு அளவில் பூசினாராம். இதனை, - 1.வெள்ளிலோத் திரத்தின் பூம்பொருக் கரைத்த சாந்தின் காசறு குவளைக் காமர் அகவிதழ் பயில ம் (தடிப்பு) - அட்டி'? என்றார். பாலை வெம்மைக்குக் குளிர்ச்சியைத் தரும் இம்மலர் "சருகு மணக்கும் மல'ருமாகும். ஆன்மிகத்தார் இம்மலரைத் தும்பையைப்போன்று அமைதிக் குணங்களுக்குரியதாகக் கொண்டனர்.8 * 1 சீவ, சி. 2685 3 புட், வி: 83: 2. சிவ. சி. 622