பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/694

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



81. பொன் ஊட்ட மலர்.

செம்பருத்தி.

பருத்தி இனத்தைச் சேர்ந்தது செம்பருத்தி. இதனைச் செம்பரத்தை, செம்பரத்தம் என்பர். இது பருத்தி இனத்த தாயினும் பஞ்சுள்ளதன்று. பருத்தியைவிடப் பெரிய செடியா யினும் புட்ப விதி இதனை நிலப் பூவாகவே காட்டியது, இதில் 12 வகை உண்டென்பர். சிவந்த இதழ்களை உடைய இது சிலவகைகளில் பூக்கும். ஒருவகைப் பூ புனல் விரிவு வடிவத்திலும், மற்றொன்று ஒழுங்கற்ற அடுக்காகவும் பூக்கும். இது வழிபாட்டிற்குரிய பூ, காட்டுப் பூ என்னும் வகையில் முல்லை நிலத்ததாகிய இது கார்காலத்தில் அதிகம் மலரும். - இப் பூ பொன் சத்துள்ளது என்பர். பூவைப் பச்சையாகவே தின்னலாம். எண்ணெயிலிட்டு ஊறவைத்து முடி வளர்ச்சிக்குத் தட்வலாம். கருக்கு நீரிட்டும் பொடித்தும் பயன்படுத்தலாம், ஊட்டச் சத்தால் இது 'பொன் பூ: 82. மாணிக்க மலர். மாதுளை. மாணிக்கக் கல்லில் ஒருவகை சாதுரங்கம் எனப்படும் அதன் நிறத்திற்கு மாதுளைப் பூவும் கூறப்பட்டுள்ளது.? அபிராமி அம்மையின் உடல் நிறத்தைச் செக்கச் சிவந்த பொருள் களாக உருவகஞ் செய்த அபிராமி பட்டார், - 'மதிக்கின்ற ம்ாணிக்கம் மாது ளம் போது".3 一5了筠f மாணிக்கத்துடன் பாடினார். இஃது அவரது அபிராமி அந்தாதி யில் முதற்பாட்டு. இந்நூலின் இறுதிப் பாட்டிலும், 'அண்டமெலாம் பூத்தாளை மாதுளம் பூ நிறத்தாளை’: -என்றமைத்தார். இடைப்பாடல்களில் பாடவில்லை. இயல்பாகவோ திட்டமாகவோ முதலிலும் இறுதியிலும் அமைந்த இவ்வமைப்பு நயத்தற்குரியது. 1. புட், :3. 8 அபி அந் : 1. 3. சிலம்பு : 14 188 டிரைமேற்கோள் 4 அபி. அந் : 191.