பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/700

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

680


தொடுத்த தொடையல் பேர்ன்றது. பல மலர் அமைந்தது. மொத்தத்தில் குடை போன்றது. பாளை பிடிப்பு விட்டு விழும். அப்போது பூங்குலை வாள் வடிந்தது போன்று தோன்றும். இத்தோற்றம் விரும்பத் தக்க வனப் புடையது. அலர்ந்த பல பூக்கள் மாலை போன்று தோன்றும், நரம்புகளோடு 'கவரி போன்று வண்டுண விரி'யும், "முத்தின் அன்ன” வெள்ளிய மலர். அது வீழும் காட்சி ஆலங்கட்டி மழை போன்றது - இவ்வாறு இப் பூவின் வளர்ச்சியைப் பாட்டில் வடித்துள்ளார். தொடர்ந்து இப் பூவால் உருவாகும் பகங்காயின் - பிஞ்சின் - நீர் மிகச் சுவையுடையது என்றார். திருவள்ளுவர், 'பாலொடு தேன் கலந் தற்றே பணிமொழி வால்எயிறு ஊறிய நீர்' - என்றார். இதைப்போன்று இப், 'பூவொடு வளர்ந்த மூவாப் பசுங்காய் நீரினும் இனிய வாகிக் கூர் எயிற்று அமிழ்தம் ஊறும் செவ்வாய்' என இப்பிஞ்சின் சுவைநீt பாடப்பட்டது. இது முற்றிய காய், 'அடைகாய்' எனப்படும். வெற்றிலையுடன் தம்பலத்திற்கு இது சேர்க்கப்படுவதை அறிவோம். இது மலரும் தோட்டத்தில் வாழும் மகளிர் இப்பூக் களை நரம்புடன் சூடிக்கொள்வர். மணமுள்ள பூ. மருத நிலத்ததாகிய இது பின்பணிப் பருவத்தில் மலரும். கிளைவிடாத புல்லினம் என்ற வகையில் இது புதர்ப் பூவாம் நிலப்பூவாகும். . . 88. பாளைக்கள் மலர். தெங்கு

  • ー - பாக்கினது பிஞ்சின் நீர் போல் சுவையுடையது தெங்கிள நீர். இதனை வழங்கும் பூவை மலர விடாமல் பாளையைச் 'சிவித்தான் கள்ளை வடிக்கின்றனர். கள் 'தெங்கின் விளை பூந்

தேறல்' எனப்பட்டது. . : - 28-26 : 885 : waಹಿ 8 ,22س:13: ت49 a i = ہی 1 ಃ ¢ಿ!!!!