பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/702

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

682


(RICE) ஆனது என்பதை ஆங்கில அகர முதலி ஒன்றிலேய, பதித்துள்ளனர். எனவே, அரிசி என்னுந் தமிழ்ச்சொல், மூலமாக நின்று நெல்லின் மூலப்பிறப்பிடமாகத் தமிழகத்தைக் காட்டு கின்றது. நெல்லின் பூ மிகச் சிறியது. நெல்லிற் காணப்படும் மூன்று உமி அமைப்புகள் பூக்காம்பிலைகள் எனப்படும். அவற்றை ஒட்டியுள்ள கருக்காய் அமைப்பு புறவிதழாகும். நடுவில் அமைந்த இரண்டு செதில்கள் அகவிதழ்கள். இவற்றிற்கு மேல் ஆறு நகரங்கள் அமைந்திருக்கும். அதனொடு ஒரு சூலகமும் சூலகத் தில் இறகு வடிவத்தில் இரண்டு சூல் முடியும் இருக்கும். இத்துணையும் ஒரு சிறு நெல்லளவே. பூவின் நிறம் பெரும் பாலும் இளமஞ்சள். ஒட்டு முறையால் ஒரளவு வேறுபாடு அமையும். தமிழ் இலக்கியங்களில் நெல் பரவலாக இடம் பெற்றிருப் பினும் நெற் பூவை ஓரம்போகியார் குறித்துள்ளார். வயலின் நண்டு வளையில் நெற்பூ உதிர்ந்து நிறைந்துள்ளதை, "தண்ணக மண்ணளை (நண்டுவளை) நிறைய நெல்லின் இரும்பூ உறைக்கும் ஊரன்" 2 -எனப்பாடியுள்ளார். ஆனால், இதில் நெற்பூ, 'இரும்பூ எனக் கருமை-நீல நிறமாகக் கூறப்பட்டுள்ளது. சிலவகை அரிசியின் மேல் சொலியமைப்பு கருமையாக இருப்பதைக் காண்கின்றோம். கருங்கார்’ என்னும் நெற்பூ ஒரளவில் இந்நிறமாகும். இவ்வகை நெல்லின் பூவை கண்டு 'இரும் பூ' என்றிருக்கலாம். நெற்பூ மருத நிலத்தது, புல்வகையால் நிலப்பூ விளை விக்கும் பாட்டத்திற்கேற்பப் பணிக்காலமும் பருவமாகும். உணவை வழங்கும் இச் சோற்று மலர்' தமிழ் மண்ணிற்கு உரியது என்பது நமக்கொரு பெருமையாகின்றது. - 75೯೯RTH ENGಭ8ಳ Dio c. 961 : 'ಕಿ'# ಕಿರಿ