பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/716

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

696


கின்றது. இது செடிக்குப் புலன் உணர்வு உண்டு என்னும் செடியியல் கருத்தைப் பேசுகின்றது. இத்தொடரில் உள்ள மோப்ப', 'குழையும்’ என்னும் இரு சொற்களும் பொருள் அழுத்தங் கொண்டவை. அனிச்ச மலர் பற்றிய ஆய்வின் எம் முனைக்கும் மோத்தலும் குழைதலும் ஆணிவேர்கள் போன்றவை. "குழைதல் அனிச்சத்தின் தன்மை. மோப்பக் குழைதல்’ இதன் தனித்தன்மை. இக்குறிப்பால் திருவள்ளுவர் அக்காலச் செடியியல் அறிஞராகக் காட்சியளிக்கின்றார். - அனிச்ச மலர்பற்றிய திருக்குறட் கருத்துகள் அல்லாமல் குறிஞ்சிப்பாட்டு, 'ஒண்செங் காந்தள் ஆம்பல் அனிச்சம்" - என்றும், கலித்தொகை, "அரிதி. அவிழ்நீலம் அல்லி அனிச்சம்"2 - என்றும் பெயர் குறிப்பிடும் அளவில் பாடியுள்ளன. இவையல்லாமல் சங்கப் பாட்டுகளில் வேறெங்கும் பேச்சில்லை. பின்னர் எழுந்த இலக்கியத் தாரில் அனிச்சத்தைப் பாடியோரும் திருவள்ளுவர் குறித்துக் காட்டிய கருத்துகளையே தாம் தொடுத்துப் பாடியுள்ளனர். திருவள்ளுவர் கூறிய மென்மைக் கருத்தை, 'அணித்தம் மிதிப்பினும் பனித்த லான ஒளிச்செஞ் சீரடி (பெருங்:உஞ்சை:53:162, 163.) 'அம்மென் அனிச்ச மலரும் அன்னத் துவியும் வெம்மை யாமென் றஞ்சி மெல்ல மிதியாத' (சீவ.சி:2454) “... ... ... அனிச்சப் பூமேல் மிதிக்கின் பதைத்தடி பொங்கும் நங்காய்” (திருக்கோ:228) 'ஐயவாம் அனிச்சப் போதின் அதிக நொய்ய வாடல் பையர வல்குலாள்தன் பஞ்சின்றிப் பழுத்த பாதம்’ (கம்ப: . - கோலங்:14) என்றெல்லாம் தொடுத்துப் பாடின. - திருத்தக்க தேவர், வள்ளுவர் வழிபற்றி, 'அம்மென் னனிச்ச மலரும் அன்னத் தூவியும் வெம்மை யாமென் றஞ்சி மெல்ல மிதியாத" - என மென்மையை அன்னத் தூவியின் இனத்துடன் பாடினார். மேலும், 1. குறி. பா : 62, 3 சீவ சி : 2454, 2. கலி ; 91 1, -