பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/720

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

700


நிலம், இனம் பற்றித் தெளிவான விளக்கம் பெறச் சான்றுகள் நிறைவாக இல்லை. . கொங்கு வேளிர், "அணி நிற அனிச்சம்' என்றுள்ளார். அணி நிறம் என்றது. பொதுவில் வண்ணனையாக அமைவதாக லாம். இதனைக் கணக்கில் எடுத்துக்கொண்டால் அழகிய நிறம்’ என்னும் அளவே கொள்ள வேண்டும். அதற்கு மேல் இன்ன நிறம் என்று கொள்வது கற்பிப்பதாகவோ இழுத்துக் கட்டிக் கூறுவதாகவோ அமைந்துவிடும். அனிச்சத்தை மிதிக்கும் அடிகளைச் 'செஞ்சீறடி எனக் குறித்திருப்பது அணிச்சத்தின் செம்மையாகக் கொள்ள முடியாது. அனிச்சமலர் அவ்வகை உவமையாக எங்கும் வைக்கப்படவில்லை. மென்மைக்கே உவமையாக- அடைமொழியாக உள்ளது தெளிவாகத் தெரிவது, எனவே, அடியின் செம்மையை அனிச்சத்திற்கு ஏற்றுவது நாமாக ஏற்றுவதாகவே முடியும். மற்றோரிடத்தில் கொங்கு வேளிர் வளி இதழ் அனிச்சம்' என்றுளளார். கொங்கு வேளிர் காலம் கி. பி. நான்காம் நூற்றாண்டளவினதாகும். அக்காலத்தில் அனிச்சம் காட்சிப்பட்டு இவ் வரி இதழ் எழுதப்பட்டிருக்குமானால் அனிச்சமலர் தனித்தனி அகவிதழ்களை உடையது என்றும், அவ் விதழ்களில் வரி-கோடு அமையப்பெற்றது என்றும் கொள்ளலாம். கையில் விரல்களால் பிடித்து மோக்கும் நிலையை வைத்து நோக்கினால் இம்மலர் மிகச்சிறியது அன்று ஓரளவில் விரல்களில் கொள்ளும் அளவுடையது ஆகும். எனவே, மிகச் சிறியதல்லாது, இதழ்கள் கொண்ட தனி மலராக, இதழ்களில் வரி கொண்டது என இதன் வடிவம் தென்படுகின்றது. இஃதும் நிழல் போன்ற காட்சியாகும். . . இம்மலர் மலரும் பொழுதை ஒர் உரைக்குறிப்பு காட்டு கின்றது. 'அனிச்சமும் அன்னத்தின் துாவியும்’ என்னும் குறள் தொடர்க்கு உரைவிரித்த பரிப்பெருமாள் என்னும் உரைகாரர். 'இதனால் இரவும் பகலும் காணப்பட்ட பொருள்களை உவமமாகக் கூறிய அதனால் ... ... ... * 4 - என்று எழுதியுள்ளார். இரவும் பகலும்’ என்னும் வரிசையை அனிச்சத்திற்கும் துரவிக்கும் குறள் 120 உரை.