பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/722

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

702


காலடியால் மிதிபடவேண்டும். மிதிபடுவதற்கு இப் பூ நிலத்தில் இருக்க வேண்டும். எனவே இது நிலத்தில் புதராகப் படரும் சிறு செடியில் பூப்பது. இதனால் 'அனிச்சப் பூ நிலப் பூ என்னும் கருத்து எழுந்தது, - " . இக்கரணியத்தாலோ என்னவோ புட்ப விதியும் அனிச் சத்தை நிலப் பூப் பட்டியலில் கோத்தது. - நிலச்செடியில் காலில் மிதிபடும் என்றால் மிதிபடும்போது மலர் மட்டுமன்றிச் செடியின் இலை, காம்பு, தண்டு முதலியனவும் மிதிபட்டாகவேண்டும். இதனால் உறுத்துவது மலர்மட்டுமன்று. எனவே, மலரின் மென்மை சுட்டபட்டதாகாது. இக்கருத்து இதற்கு மாறுபட்ட கருத்திற்கே துணையாகும். மரத்திலோ கிளைகள் விட்ட பெருஞ் செடியிலோ பூத்து, நடக்கும் வழியில் காம்பு கழன்று விழுந்து கிடக்கலாம். நடக்கும் மாதர் அடியிற்படுதற்கு வாய்ப்பாகும். எனவே, இவ்வழியில் 'அனிச்சப் பூ கோட்டுப் பூ என்றால் முன்னையதைவிட இக்கருத்து வலியுடைத்தாகும். இடைக்காலத்துப் பெருமக்களது கருத்திற்கேற்ப இதனை மரம் என்றும், இப் பூ கோட்டுப் பூ என்றும் கொள்ள வேண்டி யுள்ளது. 'மரமன்று பிற ஒன்று என்பதற்குப் பொருத்தமான சான்றுகள் மலர் காட்சிப்பட்டு அறிவிக்கப்படும் வரை கோட்டுப் பூ என்றே கொள்ள வேண்டியுள்ளது. சூடாமணி நிகண்டு. 'அம் கான் அனிச்சம்தானே' என அழகிய காட்டுமர மாகக் காட்டியுள்ளது. 'அம் கான்’ என்னும் தொடர் செய்யுளின் எதுகையில் அமைந்ததால் முழுமைச் சான்றாகக் கொள்ள மனம் வரவில்லை. இருப்பினும் கம்பம் பகுதியில் வாழும் ஒரு முதியவர் 'அனிச்சமரம் காட்டுமரந்தான். என் முன்னோர் கூறக் கேட்டிருக் கின்றேன்" என்றார். இதனையும் உறுதியான சான்றாக்க இயலாது. இந்த அளவிற்குக் கூட நிலத்திற்கு வேறு சான்று இல்லை. எனவே, இதனைத் தற்காலிகக் கருத்தாக 'முல்லை நிலத்தது' என்று சொல்லலாம். - நிகண்டுகள், 'நறவம், கள்ளி அருப்பலம் அனிச்சம்' என அனிச்சத் திற்கு மூன்று மாற்றுப் பெயர்களை வழங்கியுள்ளன. இவற்றுள்