பக்கம்:அறிவியல் வினா விடை-புவியியல்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

53. 54. 55. 56. 77 அதற்குரிய விசைகள் யாவை என்பதை அது விளக்குகிறது. இவ்வியலின் சிறப்பியல்புகள் யாவை? 1. ஒரு விறைப்பான தட்டின் நடுவில் மிகக்குறைந்த அளவிலேயே மாற்றம் நிகழ்கிறது. 2. தட்டுகளின் விளிம்புகளில் சீரமைப்பு ஒரே சீராக நடைபெறுகிறது. 3. தட்டுகளுக்கிடையே இடைவெளி இல்லை. 4. ஒரு தட்டு மற்றொரு தட்டிலிருந்து எளிதில் விலகும். இப்பொழுது கீழிருந்து வெப்பப்பாறை இடைவெளியை நிரப்ப மேல் வருகிறது. இம்மாற்றமே நடுக்கடல் மலைத் தொடர்களிலும், கண்டங்களிலும், பள்ளத்தாக்குகளி லும் காணப்படுவது. 5. பெருமளவுக்கு ஒரு தட்டு மற்றொரு தட்டின் மீது படியாது. ஒரு தட்டு மற்றொரு தட்டு நோக்கி நகரும்பொழுது, அவற்றில் ஒன்று சரிந்து அதன் பொருள் மற்றொரு தட்டின் விளிம்புக்குச் செல்லும். கீழ்ச் செல்லும் தட்டிலுள்ள வளைவு கடல் அகழியை உண்டாக்குகிறது. அமிழும் தட்டு, ஆழத்தில் அமைந்த நிலநடுக்கங்களை உண்டாக்குகிறது. அது புவிக்கு அடியில் செல்லும்பொழுது உண்டாக்கும் உராய்வு அகழிக்கு மறுபக்கத்தில் எரிமலைகளை உண்டாக்குகிறது. தட்டுக்கட்டமைப்பியல் கூறும் புதிய கொள்கை யாது? புவியின் வெளிப்புற ஒட்டிலுள்ள பெரிய தட்டுகள் நகர் வதால் நிலநடுக்கங்களும் எரிமலைகளும் உண்டாகின் றன. மேலும் மலையும், கனிமங்களும் உருவாகின்றன. பிளவுகள் என்றால் என்ன? வரலாற்றுக்கு முந்திய காலங்களில் நிலத்தில் ஏற்பட்ட பெரும் வெடிப்புகள் ஆகும். இவற்றை இன்னும் ஆறாக் காயங்கள் எனலாம். - இவ்வெடிப்புகள் ஏற்பட்டபொழுது நிகழ்ந்த மாற்றங்கள் யாவை? மலைகள் தூக்கி எறியப்பட்டன. கடல்களின் அடியில் பெருத்த மாற்றங்கள் ஏற்பட்டன.