பக்கம்:அறிவியல் வினா விடை-புவியியல்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20. 21. 22. 25. 24. 25. 26. 72 மண்டலம் V மிக அதிக இடர். சாமோலி, அரிதுவாரம், உள் இமாலயப் பகுதி. இந்தியாவில் நில நடுக்க ஆராய்ச்சிக்காக உள்ள அமைப்பு கள் யாவை? 1. இந்தியப் புவி அமைப்பியல் அளவை. மிகப் பழமை யானது. இதன் இயக்குநராக இருந்தவர் ஒல்டுகாம். 2. இந்திய வானிலை இயல் துறை. 3. தேசிய இயற்பியல் ஆராய்ச்சி நிறுவனம். இவை மூன்றும் மைய அரசுக் கட்டுப்பாட்டில் உள்ளவை. நிலநடுக்கங்கள் எங்கு ஏற்படுகின்றன? புவி ஒடு நிலைப்புத்தன்மை இழந்த இடங்களில் ஏற்படுகின்றன. புவி அமைப்பு முறையில் முதிரா மலை வளையங்களில் ஏற்படுகின்றன. இந்த வளையமுள்ள இடங்கள் பலூசிஸ்தான், இமாலய மலைகள், மேல் AL(İTilþiT. பசிபிக் வளையத்தில் ஏற்படும் நில நடுக்கங்களின் சதவீதம் என்ன? 68% ஆகும். மையத்தரைக்கடல் பகுதியில் ஏற்படும் நிலநடுக்கங்களின் சதவீதம் என்ன? 21% ஆகும். நிலநடுக்கங்களின் வகைகள் யாவை? 1. எரிமலைசார் நிலநடுக்கங்கள் 2. தட்டுச்சார் நிலநடுக்கங்கள் 3. தீப்பாறை நிலநடுக்கங்கள் நிலநடுக்கக் கொள்கைகள் யாவை? 1. சுருக்கக் கொள்கை 2. விரிவுக் கொள்கை 3. கண்ட நகர்வுக் கொள்கை 4. தட்டு நகர்வுக் கொள்கை. நிலநடுக்கங்களின் பின் நிகழ்வுகள் யாவை? குறைந்த அளவுள்ள பின் அதிர்ச்சிகள் இருக்கும். இவை ஒரிரு நாட்கள் தொடரும். குஜராத் நில நடுக்கங்களில்