பக்கம்:அறிவியல் வினா விடை-புவியியல்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72. 73. 69 மற்றொன்று படியும்பொழுது, எரிமலைத் தெறிப்புகள் உண்டாகின்றன. காட்டாக, ஜப்பான் எரிமலைகள். ஆசியத் தட்டுக்கு அடியில் பசிபிக் தட்டுகளும், பிலிப்பைன் தட்டுகளும் நழுவியபொழுது இந்த எரிமலைகள் உருவாயின. 4. பெரிய எரிமலைகள் தரைக்கு அடியிலுள்ள ஆழமான பாறைகளின் நுண்கால்வாய்களின் திறப்பிலிருந்து உண்டாகி இருக்கலாம். எக்கோள்களில் எரிமலைகள் உள்ளன? திங்கள், வெள்ளி முதலியவற்றில் எரிமலைகள் உள்ளன. எரிமலைச் சுழற்சி என்றால் என்ன? ஒர் எரிமலை தோன்றுதல், வளர்தல், ஒடுங்குதல் ஆகியவை எரிமலைச் சுழற்சியில் உள்ளவை. இது பால காலகட்டங்களுக்கு உட்பட்டது. 1. நிலநடுக்கம் நிலநடுக்கம் என்றால் என்ன? புவியின் உள்ளே தோன்றும் விசைகளால் பெருமளவில் பாறைகள் நகர்வதால் கீறல்களும் பிளவுகளும் உண்டாகின்றன. இவ்வாறு தோன்றும் பிளவுகளின் இரு புறமுமுள்ள பாறைகள் சட்டென்று கீழோ மேலோ செல்வதால் ஏற்படுவது நில நடுக்கம். சில சமயங்களில் எரிமலைகள் வெடிப்பதாலும் நில நடுக்கம் உண்டாகும். நிலநடுக்கவியல் ஒர் அறிவியலாக எப்பொழுது உருப் பெற்றது? 1750 களில். நிலநடுக்கவியல் உருவாகக் காரணமாக இருந்த இரு பெருமக்கள் யாவர்? பிரஞ்சு நாட்டு அலெக்சிஸ் பெர்னி, ஆங்கில நாட்டு இராபர்ட் மேலட். இவர்கள் இருவரும் 19 ஆம் நூற்றாண்டைச் சார்ந்தவர்கள். மின் காந்த நில நடுக்க வரைவியை அமைத்தவர் யார்?