பக்கம்:அறிவியல் வினா விடை-புவியியல்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

65. 79 1.பொதுவாக அது நிலஈர்ப்பை எதிர்த்துத் தாங்குவதாக வும் நேராகவும் அமைக்கப்படவேண்டும். 2. கட்டிடத்தின் எடை 10 பங்கு என்றால் அதில் ஒரு பங்கு கூடுதல் வலிமை இருக்குமாறு அமைய வேண்டும். இது எந்த இழுப்பு அல்லது தள்ளும் ஆற்றலையும் சமாளிக்கவல்லது. ஜப்பானில் இந்த வீதம் 1.5. உலக அளவில் நிலநடுக்கங்கள் தோன்றுவது பற்றிய உண்மைகள் யாவை? . 1. மிகப் பெரும் நிலநடுக்கங்கள் அளவெண் 8க்கு மேல் ஆண்டுக்குச் சராசரி 1. 2. பெரும் நிலநடுக்கங்கள். அளவெண் 7-7-9 ஆண்டுக்குச் சராசரி 18. 3. வலுவான நிலநடுக்கங்கள். அளவெண் 6-6-9. ஆண்டுக்குச் சராசரி 120. 4. சீரான நிலநடுக்கங்கள். அளவெண் 5-5-9, ஆண்டுக்குச் சராசரி 800. 5. இலேசானவை. அளவெண் 4-49, ஆண்டுக்குச் சராசரி 6200. 6 சிறியவை. அளவெண் 3.39 ஆண்டுக்குச் சராசரி 49,000. 7. மிகச் சிறியவை. அளவெண் 3க்குக் கீழ். அளவெண் 1-2. ஒரு நாளைக்கு 8000. அளவெண் 2-3. ஒரு நாளைக்கு 1000. (The Hindu 26.9.2002). 12. கடல்கள் பொதுச்செய்திகள் கடல்கள் எவ்வாறு தோன்றின? புவி தோன்றிய காலத்தில் அதில் ஏற்பட்ட பெரும்பள்ளங்களில் அப்பொழுது பெய்த பேய் மழையால் நீர் நிரம்பலாயிற்று. இப்பள்ளங்களே பின் கடல்களாயின. இந்நிகழ்ச்சி பல கோடி ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்டது. பெருங்கடல்கள் மற்றும் துணைக்கடல்கள் ஆகியவற்றின் மொத்தப் பரப்பென்ன?