பக்கம்:அறிவியல் வினா விடை-புவியியல்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10. 11. 12. 13 14. 15. 107 1. அயன மண்டலத்தில் இது காணப்படுகிறது. 2. இம்மண் தக்கான பீடபூமியின் வடகிழக்கு மத்தியப் பிரதேசம், அஸ்ஸாம், மேற்கு கிழக்குத் தொடர்ச்சி மலைச் சரிவுகள் ஆகிய இடங்களில் காணப்படுவது. மண்வளப் பாதுகாப்புக்குரிய முறைகள் யாவை? 1. பயிற்சுழற்சி. 2. சம உயரக் கோட்டுப் பயிரிடுதல். 3. அடுக்குப் பயிரிடுமுறை. 4. கீற்றுப் பயிரிடும் முறை. 5. நிலையான புல்வெளி வளர்த்தல். ஓரிடத்தின் இயற்கைத் தாவரத்திற்குரிய காரணிகள் யாவை? வெப்பம், மழையளவு, உயரம், மண். பலவகை இயற்கைத் தாவரங்கள் ஆசியாவில் வளரக் காரணம் யாவை? ஆசியாவில் எல்லா வகைத் தட்ப வெப்பநிலையும் மண் வகையும் உள்ளன. ஆசியாவில் வளரும் பலவகை இயற்கைத் தாவரப் பகுதிகள் யாவை? 1. துரந்திரப் பிரதேசம் 2. ஊசியிலைக் காடுகள் 3. அகன்றஇலைக் காடுகள் 4. ஸ்டெப்பி புல்வெளி 5. பாலைவனங்கள் 6. மையத் தரைக்கடல் தாவரம் 7. பருவக்காற்றுக் காடுகள் 8. நிலநடுக்கோட்டுக் காடுகள். அகன்றஇலைக் காடுகள் எங்குள்ளன? மஞ்சூரியா, வடசீனா. இக்காடுகளில் உள்ள முக்கிய மரங்கள் ஒச், எல்ம், பீச், செஸ்நட் பருவக்காற்றுக் காடுகள் எங்குள்ளன? இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், பங்களாதேஷ். இக்காடுகளில் தேக்கு, செம்மம், தேவதாரு முதலியவை வளர்கின்றன.