பக்கம்:அறிவியல் வினா விடை-புவியியல்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72. 73. 74. 75. 76. 77. 78. 79. 128 பெரியாறு, ஷராவதி, நேத்திராவதி, பொன்னானி, ஆழியாறு 3. இயற்கைத் தாவரங்கள் இயற்கை வளங்கள் யாவை? நிலம், நீர், மண், காடுகள், புல்வெளிகள், தாதுப்பொருள் கள், ஆற்றல் மூலங்கள் ஆகியவை இயற்கை வளங்கள் ஆகும். இவற்றின் சிறப்பு யாது? ஒரு நாட்டின் பொருள் வளம் இவற்றைப் பொறுத்தே உள்ளது. இந்தியாவின் நிலவளம் எவ்வாறு உள்ளது? இந்தியாவின் மொத்தப் பரப்பு 3.2 மில்லியன் ச. கி.மீ. இதலி 50% வேளாண்மை, 18% மேய்ச்சல் நிலம் அல்லது தரிசு, 20% காடுகள். இந்தியாவின் நீர் வளம் எவ்வாறு உள்ளது? மொத்த வேளாண்பரப்பில் 44% பாசனப் பரப்பாகும். இவ்வேளாண்மைக்கு வேண்டிய நீர் ஆறுகள், அணைக் கட்டுகள், ஏரிகள், கிணறுகள் மூலம் கிடைக்கின்றது. பெட்ரோலியத்தின் பயன்கள் யாவை? 1. எரிபொருள் 2. கச்சாப் பொருள் 3. வேதிப்பொருள், ஆடைகள், பிளாஸ்டிக் பொருள்கள், உரங்கள் முதலியவை செய்யப் பயன்படுவது. இயற்கை எரிவளி எங்கிருந்து கிடைக்கிறது? பெட்ரோலியக் கிணறுகளிலிருந்து கிடைக்கிறது. இந்தியாவில் முதல் அணு ஆற்றல் நிலையம் எப்பொழுது நிறுவப்பட்டது? எங்கு? பம்பாய்க்குஅருகிலுள்ள தாராப்பூரில் 1969 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. தமிழ் நாட்டில் அணு ஆற்றல் நிலையம் எங்குள்ளது?