பக்கம்:அறிவியல் வினா விடை-புவியியல்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26. 27. 28. 29. 105 பலவற்றைத் தன்னுள் அடக்கியது. பொறிஇயல், வானிலை இயல், புவி அமைப்பியல், கடல் அறிவியல், மாசுக்கட்டுப்பாடு, கடல் கட்டுமானம், கடல் ஆற்றலைப் பெறுதல், கடல் வளத்தைப் பயன்படுத்தல் முதலியவை இதன்கண் அடங்கும். வானவெளிக் கலக் கடலியல் எப்பொழுது தோன்றிற்று? 1957இல் தோன்றிற்று. இதன் நோக்கம் என்ன? இதில் வானவெளிக் கலங்கள் கடல்களை ஆராய்ந்து பல பயனுள்ள செய்திகளைத் திரட்டியுள்ளன. வானவெளிக் கலக் கடலியலின் பயன்கள் யாவை? 1. கடல் மேற்பரப்பு வெப்ப நிலைகள் வானவெளிக் கலங்களின் உதவியினால் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2. அமெரிக்க நிம்பஸ் வானிலை நிலா கல்ப் நீரோட் டத்தை அறிந்து, அதில் சிக்கிய மீன்கப்பலை மீட்க உதவியது. 3. அமெரிக்க டிராஸ் நிலாக்கள் இந்தியக் கடலில் உருவாகிய புயல்களை முன்கூட்டியே அறிவித்தன. 4. கடல்நீரின் வெப்பநிலையைக் கொண்டு மீன்பிடிக்கும் இடங்களை வானவெளிக் கலங்களைக் கொண்டு அறியலாம். 5. அமெரிக்க ஜெமினி கப்பல்களிலிருந்து எடுக்கப்பட்ட படங்கள் கடல் தரை பற்றியும் நீரோட்டங்கள் பற்றியும் அறிய அதிகம் உதவியுள்ளன. 6. கப்பல் போக்குவரத்துக்கு அமெரிக்கக் கப்பல் போக்குவரத்து நிலாக்கள் அதிகம் உதவின. 7. கடல் ஆராய்ச்சி செய்யும் கப்பல்கள் மிதவைகள் ஆகியவை திரட்டும் தகவல்களைச் செய்தி நிலாக்கள் அஞ்சல் செய்யும். கடலிலுள்ள ஆழமான அகழ் எது? மரியானாஸ் அகழ். பசிபிக் கடலில் உள்ளது. இதன் ஆழம் 11,033 மீ. 30. அனைத்துலகக் கடல்விழா எங்கு எப்பொழுது நடந்தது?